இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ஆம் தேதி அன்று அதிகாலை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கப்பட்டன. இதில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஒன்றிய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், பார முல்லா, ரஜவுரி, குப்வாரா உள்ளிட்ட மாவட் டங்களின் கிராமங்களை குறிவைத்து சிறு பீரங்கிகளால் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், 16 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த ட்ரோன்களை இந்திய விமானப் படை நடுவானில் அழிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன. பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.