world

img

தீக்கதிர் உலக செய்திகள்

2027-க்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் தயாராகிவிடும் 2027

ஆம் ஆண்டிற்குள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு உக்ரைன் தொழில்நுட்ப ரீதியாகத் தயாராகிவிடும். உறுப்பினர் தகுதிக்குத் தேவையான நடைமுறைகளை 2026 இறுதிக்குள் உக்ரைன் அமல்படுத்தி முடித்துவிடும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரி வித்துள்ளார். ரஷ்யாவுடனான போர் முடிந்த பிறகு உக்ரைனின் பாது காப்பை உறுதி செய்வதில் இந்த இணைப்பு மிக முக்கியப் பங்கு  வகிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள் ளார். ஒரு தெளிவான காலக்கெடுவை ஐரோப்பா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

12,000 ஆசிரியர்கள்   ஜெர்மனியில் வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் ஊதிய உயர்வு கோரி  நாடு தழுவிய அளவில்  சுமார் 12,000 ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மன் கல்விச் சங்கம் விடுத்த அழைப்பைத் தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் நடை பெற்றது.  ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வு, அதாவது ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 300 யூரோக்கள் ( 26,000 ரூபாய்) வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை அரசு நிறைவேற்ற முடியாதென மறுத்துள்ளது. எனினும் அடுத்தகட்ட ஊதியப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 11 முதல் 13 வரை நடைபெறவுள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக  கியூபாவில் பிரம்மாண்ட தீப்பந்த பேரணி

ஹவானா, ஜன.30- அமெரிக்காவின் ஏகாதிபத்திய அச்சு றுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆயிரக்கணக்கான கியூப இளைஞர்கள் ஹவானாவின் வீதிகளில் தீப்பந்தங்கள் ஏந்தி பிரம்மாண்டமான ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அறைகூவல் கியூப இளம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் (UJC) செயலாளர் மெய்விஸ் எஸ்டீவெஸ் எச்செவர்ரியா, இந்த ஊர்வலத்தில் பேசிய தாவது: “அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களால் எங்க ளை ஒருபோதும் வீழ்த்த முடியாது. இந்தத் தீப்பந்தங்கள் கியூப மக்களின் அசைக்க முடியாத மன உறுதியின் அடையாளம் என அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதி ரான கியூப மக்களின் உறுதியை வெளிப் படுத்தினர். மேலும் கடந்த ஜனவரி 3 அன்று வெனிசுலாவில் அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில்  வீரமரணம் அடைந்த 32 கியூப வீரர்களுக்கு இந்த ஊர்வலத்தின் போது வீரவணக்கம் செலுத்தப்பட்டது. வரலாற்றுப் பேரணி சுமார் 73 ஆண்டுகளுக்கு முன் 1953 ஜனவரி 27 இல் பிடல் காஸ்ட்ரோ இளம் வயதில் வழக்கறிஞராக இருந்த போது கியூப பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து பாடிஸ்டாவின் ராணுவ ஆட்சி க்கு எதிராகவும், கியூபாவின் தேசத் தந்தை யான ஜோஸ் மார்டியின் நூற்றாண்டு விழா வைக் கொண்டாடவும் ஹவானாவில் முதல் முறையாக இப்பேரணியை ஒருங்கி ணைத்தார். ஜோஸ் மார்ட்டிக்கு அஞ்சலி செலுத்தும் பாரம்பரிய நிகழ்வாக இந்த பேரணி ஆண்டு தோறும் அவரது பிறந்த தினமான ஜனவரி 28 க்கு முந்தைய நாள் இரவு (ஜன.27) நடை பெற்று வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் பொதுவான லட்சி யத்தோடு இணைந்து ஒரு மாபெரும் கொள்கை அலையாக ஹவானா பல் கலைக்கழகத்தின் வாயிலில் துவங்கும் இப்பேரணி ஸ்பானிய காலனித்துவ ஆட்சி க்கு எதிராகப் போராடியதற்காக இளம் வயதில் ஜோஸ் மார்ட்டி கடுங்காவல் தண்ட னை அனுபவித்த இடமான ஃபிராகுவா மார்ட்டியானாவில் முடியும். இப்பேரணி வாயிலாக கியூப மக்கள் மார்ட்டிக்கு மரியாதை செலுத்துவதுடன், அரசாங்கத்திற்கான ஆதரவை வெளிப் படுத்துகிற, கியூபாவிற்கு எதிரான அமெ ரிக்காவின் நடவடிக்கைகள் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வடிவமாக பின் பற்றி வருகின்றனர்.   அணையா புரட்சித்தீ இருள் எப்போதும் நெருப்பின் முன் பின்வாங்கும் என்பதை காட்டும் வகையில் ஒரு நபர்  தனது கையில் உள்ள பந்தத்தில்  மற்றொருவனின் தீப்பந்தத்தில் இருந்து தீயை ஏற்றும் சங்கிலித் தொடர் நிகழ்வு முடிந்து அந்த ஒளி அணையாமல் பாது காத்து நடக்கும் இந்தப் பேரணியானது கியூ பாவில் புரட்சித் தீ என்றும் அணையாது என்பதன் சாட்சியாகக் கடைப்பிடிக்கப் படுகிறது.  இந்த தீப்பந்தப் பேரணியின் பாரம்பரி யம், இன்றும் குறையாத வீரியத்துடன் தொடர்கிறது. இந்த ஆண்டு பிடல் காஸ்ட்ரோவின் 100 ஆவது பிறந்தநாள், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீப்பந்தப் பேரணியின் 73 ஆவது ஆண்டு விழா மற்றும் ஜோஸ் மார்ட்டியின் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழாவினை முன்னிட்டு ஜன.27 அன்று இந்த ஊர்வலம் கியூப மக்களின் கொள்கையைப் பிரகடனம் செய்யும் வகையில் நடைபெற்றது.