ஸ்பெயினை நேட்டோவில் இருந்து நீக்க டிரம்ப் பரிந்துரை
நேட்டோ கூட்டமைப்பில் இருந்து ஸ்பெயினை நீக்க டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். நடந்து முடிந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகள் 2035 க்குள் தங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை ராணுவத்திற்கு செலவிட வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டது. பொரு ளாதார நெருக்கடி காரணமாக சில நாடு கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. எனி னும் பல நாடுகள் ராணுவத்துக்கான செலவை அதிகரித்துள்ள சூழலில் ஸ்பெயின் அதிகரிக்கா ததால் அதனை நேட்டோவில் இருந்து நீக்க டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
குளிர்காலம் நெருங்கும் நிலையில் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கீவில் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் அந்நகரத்தின் மின்சாரம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டன. மின்சார விநியோகம் மட்டுமின்றி நீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுவிட்டது என அந்நாட்டின் விமானப்படை தெரி வித்துள்ளது. சில வாரங்களில் ரஷ்யா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உறை பனி காலம் துவங்க உள்ள நிலையில் இரு நாடுகளும் எரிசக்தி நிலையங்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
வீரர்களை படுகொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தான் வீரர்களை படுகொலை செய்த 30 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றதாக பாக் ராணு வம் அறிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ் ்தான் எல்லைக்கு அருகே பயங்கரவா திகளுடன் நடந்த மோதலில் 11 பாகிஸ் தான் வீரர்களை பயங்கரவாதிகள் படு கொலை செய்தனர். இந்த கொடூரமான செயலுக்குப் பயங்கரவாதிகளை பழி தீர்த்ததுடன், முக்கியக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தியுள்ளோம் என பாகிஸ்தான் ராணுவ ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.