இஸ்ரேல் போர்க் குற்றவாளிதான் : அமெரிக்கவாழ் யூதர்கள் கருத்து
நியூயார்க்,அக். 10- அமெரிக்காவில் வாழும் யூதர்கள் இஸ்ரேல் போர்க்குற்ற வாளிதான் என கருத்து;j தெரி வித்துள்ளனர். இஸ்ரேல் காசா மீது நடத்தி வருகின்ற இனப்படுகொலை போர் குறித்து அமெரிக்கப் பொது மக்களிடையே கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிருப்தி அதி கரித்துள்ளது என பியூ ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பின் படி தெரிய வந்து ள்ளது. காசா மீதான போரை நிறுத்து வது தொடர்பாக டிரம்ப்பும் நேதன் யாகுவும் முன்மொழிவை வெளி யிடுவதற்கு முன் பியூ ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 39 சதவீதமானவர்கள் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை “மிகக் கொடூரமானது” என்று தெரி வித்துள்ளனர். இக்கருத்தானது 2023 இன் பிற்பகுதியில் 27 சதவீத மாகவும், 2024 இல் 31 சதவீத மாகவும் இருந்த நிலையில் தற்போது 39 சதவீதமாக அதிக ரித்துள்ளது. மேலும் இந்த ஆய்வில் பங்கேற்ற பத்து பேரில் ஆறு பேர் இஸ்ரேல் அரசின் மீது எதிர்மறையான பார்வையையே கொண்டுள்ளனர். அதேபோல இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலை க்கு டிரம்ப் அதிக ஆதரவு தருவ தாகக் கருதும் மக்களின் எண் ணிக்கை 2025 மார்ச் மாதம் இருந்த 31 சதவீதத்திலிருந்து 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. பியூ ஆய்வு மையம் மட்டு மின்றி, நியூயார்க் டைம்ஸ் மற்றும் சியன்னா பல்கலைக்கழகம் நடத்திய கருத்துக் கணிப்புக ளும் கூட அமெரிக்க மக்களி டையே இஸ்ரேலுக்கான ஆதரவு குறைந்துள்ளதையே காட்டு கிறது. 2023 அக்டோபர் 7 அன்று காசா மீதான இனப்படுகொலையை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக துவங்கிய போது 47 சதவீத அமெ ரிக்க மக்கள் இஸ்ரேலுக்கு ஆதர வாக கருத்துத் தெரிவித்தி ருந்தனர். 20 சதவீத மக்கள் மட்டுமே பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிவித்தனர். தற்போது இந்த அளவானது இஸ்ரேலுக்கு 34 சதவீதத்தினரும், பாலஸ்தீனர்க ளுக்கு 35 சதவீதத்தினரும் ஆத ரவாக மாறியுள்ளனர். அதுமட்டுமல்ல, சுமார் 51 சதவீத அமெரிக்க மக்கள் இஸ்ரே லுக்கு கூடுதல் நிதி உதவி செய்வ தற்கு எதிர்ப்புத் தெரிவித்துள் ளனர். யூதர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் அமெரிக்க மக்களைப் போ லவே அமெரிக்காவில் உள்ள யூதர்களிடமும் இஸ்ரேல் போர் தொடர்பான நிலைபாட்டில் சிறு மாற்றம் ஏற்படுள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் நடத்திய கருத்துக் கணிப்பின் படி, அமெரிக்க யூதர்களில் 61 சத வீதமானவர்கள் இஸ்ரேல் அரசு காசாவில் போர்க்குற்றங்களைச் செய்துள்ளது என்று கருதுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் 39 சதவீதத்தினர் இஸ்ரேல் ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி தான் என்றும் கூறியுள்ளனர்.