இந்திய விமானப் படை தளத்தில் விமான பயிற்சி முடித்த அதிகாரிகள்
சென்னை, அக்.10- சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் உள்ள விமானி பயிற்றுவிப்பாளர் பள்ளியில் (FIS) நான்கு பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 59 விமானிகள் தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர்களாக பட்டம் பெற்றனர். இந்த 159வது தகுதி பறக்கும் பயிற்றுவிப்பாளர் பாடநெறியை 22 வாரங்கள் கடுமையான பயிற்சிக்குப் பின் நிறைவு செய்தனர். இந்திய விமானப்படை, கடற்படை, ராணுவம், கடலோர பாதுகாப்புப் படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். பெங்களூரு பயிற்சி தளத்தின் ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார். சிறந்து விளங்கிய விமானிகளுக்கு பல்வேறு கோப்பைகள் வழங்கப்பட்டன. 75 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட இந்த பள்ளி, விமானப் பயிற்சியில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது.