tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வடகிழக்கு பருவமழை:  24 மணிநேர கட்டுப்பாட்டு அறை எண்கள்

திருவண்ணாமலை, அக். 10- திருவண்ணாமலை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் 3 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 12 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் - திருவண்ணாமலை 04175-252432, செய்யார் 04182-222235, ஆரணி 04173-290020. வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் - திருவண்ணாமலை 04175-252433, கீழ்பென்னாத்தூர் 04175-290209, தண்டராம்பட்டு 04188-246400, செங்கம் 04188-222226, கலசபாக்கம் 04181-241050, போளூர் 04181-222023, சேத்துபட்டு 04181-252600, ஆரணி 04173-226998, செய்யார் 04182-222233, வந்தவாசி 04183-225065, வெம்பாக்கம் 04182-247272, ஜமுனாமரத்தூர் 04181-245377. மேலும் பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் TNSMART app-னை பதிவிறக்கம் செய்து 

கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஆடு, மாடுகள் உயிரிழப்பு

வேலூர், அக்.10-  குடியாத்தம் ஒட்டிய தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் வியாழன் இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு வரும் கொட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் தனகொண்ட பல்லி, மோடி குப்பம், மேல் கொல்லப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் 30க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த வேர்க்கடலை மற்றும் கம்பு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேத மடைந்தன. இதனை அப்பகுதியைச் சேர்ந்த விவ சாயி ஒருவர் அந்நீரை வெளியேற்ற விவ சாய நிலத்திற்குச் செல்லும் போது கழுத்தளவு தேங்கிய தண்ணீரில் நீந்தியவாறு சென்றார். தொடர்ந்து மழைக் காலங்களில் தமிழக ஆந்திர எல்லைப் பகுதி யில் கனமழை பெய்து தமிழகத்திற்கு வரும் கொட்டாற்றில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டு விவ சாயப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைவது தொடர்கதையாக உள்ள தாகவும், இதனால் விவ சாயம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து தவிச மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த வேர்க்கடலைப் பயிர்க ளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், மேலும் கனமழை பெய்த போது பலத்த இடி தாக்கிய தில் தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கிராமத்தில் சர்க்கரை என்பவரது வீட்டில் உள்ள ஒரு பசுமாடு, 4 ஆடுகள் உயிரிழந்துள்ளன.