tamilnadu

img

புதுச்சேரியில் கேளிக்கை விடுதியாக மாறிய அரசுப் பள்ளிமீட்டெடுக்க வலியுறுத்தல்

புதுச்சேரியில் கேளிக்கை விடுதியாக மாறிய அரசுப் பள்ளிமீட்டெடுக்க வலியுறுத்தல்

புதுச்சேரி, அக். 10- புதுச்சேரியில் பாரம்பரியமிக்க அரசு உதவிப் பெறும் பள்ளியை கேளிக்கை விடுதியாக மாற்றியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரி செட்டி வீதியில் இயங்கி வந்தது சொசியத்தே புரோகிரஸ்த் அரசு நிதி உதவி பெறும் பள்ளி. இது நூற்றாண்டுப் பாரம்பரியமிக்கது. இந்த பள்ளி மூடப்பட்டு, தற்போது கேளிக்கை விடுதியாக (ரெஸ்டாரன்ட்) மாற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. புதுச்சேரி காந்தி வீதியில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு கட்சியின் நகர கமிட்டி செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். அப்போது, இப்பள்ளி வளாகத்தை அதன் உயரிய நோக்கம் கெடாமல் புதுச்சேரி அரசு உடனடியாக மீட்க வேண்டும். உரிமை யாளருக்குரிய வாடகை மற்றும் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அரசு அளித்து, நகரின் மையத்தில் உள்ள கட்டிடத்தை மீண்டும் ஒரு கல்வி மற்றும் கலைக் கலாச்சார மையமாகப் பராமரிக்க வேண்டும்”என்றார். இந்த பிரச்சாரத்தில் கட்சியின் மூத்தத் தலைவர் முருகன், செயற்குழு உறுப்பி னர்கள் சத்தியா, கலியமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் சரவணன், மதி வாணன், நகரக்குழு உறுப்பினர் வீர மணிகண்டன் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.