சென்னையில் மனநல விழிப்புணர்வு உலக சாதனையுடன் மனித சங்கிலி
சென்னை, அக்.10- உலக மனநல தினத்தையொட்டி, சென்னை செங்குன்றம் ஆர்.பி. கோதி ஜெயின் மகளிர் கல்லூரியில் மனநலம் மற்றும் அமைதிக்கான உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் மருத்துவமனைகள், தேசிய உளவியல் ஆராய்ச்சி நிறுவனம், லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 1,600க்கும் மேற்பட்ட மாணவர்கள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். மன ஆரோக்கியம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தி, சமூகத்தில் நல்வாழ்வு, அமைதி மற்றும் கருணையை மேம்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்று நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் மருத்துவமனைகளின் இயக்குநர் டாக்டர் ஜி. பிரசாந்த் கிருஷ்ணா கூறினார். உடல் ஆரோக்கியத்தைப் போலவே மன ஆரோக்கியமும் மிக முக்கியமானது, ஆனால் அது குறித்து யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. இது போன்ற நிகழ்ச்சியில் மன நலன் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த விரும்புகிறோம் என்றார்.