உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் மீதானதாக்குதலைகண்டித்துஉளுந்தூர்பேட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இடதுசாரி அமைப்புகள், விசிகசார்பில் வெள்ளிக்கிழமை (அக்.10) முன்னணியின் மாவட்டத் தலைவர் வே.ஏழுமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைச் செயலாளர் ஜி.ஆனந்தன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், டி.எஸ்.மோகன், விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் அறிவுக்கரசு, வாலிபர் சங்க மாநில இணைச் செயலாளர் எம்.கே.பழனி, மக்கள் ஒற்றுமை மேடை எம்.கே.பூவராகன், சிஐடியு ஒருங்கிணைப்பு குழு எம்.செந்தில், மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் ஏ.தேவி ஆகியோர் உரையாற்றினர்.