இஸ்ரேலை கண்டித்து சிதம்பரத்தில் ஆர்பாட்டம்
காசாவில் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்து சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே சிதம்பரம் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈதுகா கமிட்டி தலைவர் எம்.எஸ்.ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். லால்கான் பள்ளிவாசல் தலைவர் ஜவகர், சிறுபான்மையினர் மக்கள் நல குழுவின் மாநில துணைத் தலைவர் மூசா, லப்பைத் தெரு பள்ளிவாசல் தலைவர் முகமது ஹலிம், பூதகேணி பள்ளிவாசல் தலைவர் நஜ்முதீன், இப்ராஹிம் நகர் பள்ளிவாசல் தலைவர் கமலுதீன் உள்ளிட்ட பலர் பேசினர்.