உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி
உலக மார்பக புற்றுநோய் மாதத்தை முன்னிட்டு விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை(அக்.10) கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.லுசி நிர்மல் மேடெனா, மருத்துவ நிலை அலுவலர் மரு.ரவிக்குமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.