world

img

அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 7 நாடுகளுக்கு தடை - டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்குள் நுழைய மேலும் 7 நாடுகளுக்கு தடை விதித்து அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு நடவடிக்கை என்ற பேரில், பர்கினோ ஃபாஸோ, மாலி, நைஜர், தெற்கு சூடான், சிரியா, லாவோஸ் மற்றும் சியரா லியோன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்த மக்கள், வரும் ஜன.1 முதல் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம், ஆப்கானிஸ்தான், ஈரான், சோமாலியா, ஹைதி உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்தப் பட்டியல் 19 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலக மக்கள் தொகையில் 5% பேர் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.