tamilnadu

img

பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவது கண்டனத்திற்குரியது - பெ.சண்முகம்

பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றுவது கண்டனத்திற்குரியது என சிபிஎம் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது.
அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தங்களுக்குள்ள பெரும்பான்மையையும் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. என அவர் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.