பிரிட்டனில் வேலையின்மை 5.2 சதவீதமாக உயர்வு
பிரிட்டனில் வேலையின்மை 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகள் இருந்ததை விட அதிகமாகும். தற்போது பிரிட்டனில் வேலை இல்லாதவர்களின் மொத்த எண்ணிக்கை 18.83 லட்சத்தை எட்டியுள்ளது. வேலை தேடாத அல்லது வேலை செய்ய முடியாத நிலை யில் உள்ளவர்களின் (Economic inactivity) அளவு 20.8 சதவீதமாக உள்ளது. ஏற்கெனவே பிரிட்டன் மத்திய வங்கியான ‘பாங்க் ஆஃப் இங்கிலா ந்து’, தொழிலாளர் சந்தை தளர்வடைந்துள்ளதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைக்கு வருவது நல்லது : உக்ரைனுக்கு டிரம்ப் எச்சரிக்கை
உக்ரைன் விரைவில் பேச்சுவார்த்தைக்கு வருவது நல்லது என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரு கின்றன. ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ரஷ்யா,உக்ரைன், அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளநிலையில் டிரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக் கொள்கை : இஸ்லாமிய நாடுகள் கண்டனம்
பாலஸ்தீனர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் புதிய திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நடவடிக்கை இரு நாட்டுத் தீர்வு என்ற கொள்கையைச் சீர்குலைக்கும். சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பையே இல்லாமல் செய்யும் என சவூதி அரே பியா, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், இந்தோனேசியா, பாகிஸ்தான், எகிப்து, துருக்கி ஆகிய நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. 1967 ஜூன் 4 ஆம் தேதி இருந்த எல்லைகளின்படி கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்குவது தான் தீர்வு எனவும் அவை தெரிவித்துள்ளன.
தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் : பாகிஸ்தானில் 14 பேர் பலி
பாகிஸ்தானில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில் 11 பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவூர் மாவட்டத்தில் வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பன்னு நகரில் நடைபெற்ற மற்றொரு வெடி குண்டு தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு இடத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணு வம் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் மற்றும் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் போர் புரிய முடியாது; பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு ஷேக் ஹசீனா விவகாரம் எங்களின் உறவை தடுக்காது; பிஎன்பி மூத்த தலைவர் இஸ்லாம் ஆலம்கீர் பேட்டி
டாக்கா,பிப்.17- இந்தியாவுடன் நாம் போர் புரிய முடியாது. பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என்று வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான விரிவான உறவைத் தடுக்கும் காரணியாக அமையாது என்றும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவு வெறும் ஒரே யொரு பிரச்சனையில் மட்டும் சிறைப் பட்டுவிடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 17 அன்று தலைநகர் டாக்காவில் உள்ள கட்சித் தலைமை யகத்தில் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்தில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் அடிப்படை வாதிகளான வங்கதேச தேசியவாதக் கட்சி பெரும்பான்மையுடன் வென்று அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவி ஏற்கும் நிலையில் ஆலம்கீரின் இந்தக் கூற்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. சீனா-அமெரிக்காவை போல அவர் தனது பேட்டியில் கூறியுள்ள தாவது: ஷேக் ஹசீனா கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடு பட்டுள்ளார். அவரைத் தண்டிப்பது மக்களின் கோரிக்கை. இந்தியா அவரை வங்கதேசத்திடம் ஒப்ப டைக்காதது எங்களுக்கிடையிலான வர்த்தகம் மற்றும் வணிகத் தொடர்பு கள் உள்ளிட்ட உறவுகளைப் பாதிக்காது.இந்தியா-வங்கதேச உறவு ஒரு தனிப்பட்ட பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக் கூடாது. அமெரிக்கா வுக்கும் சீனாவுக்கும் இடையே பல முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் இணைந்து செயல்படுகி றார்கள். அவர்களைப் போல நாமும் செயல்பட வேண்டும் என்று ஆலம்கீர் கூறியுள்ளார். 2024 இல் அந்நாட்டில் எழுந்த இளைஞர்களின் பெரும் போ ராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வில் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேசம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு கிறது. இந்தச் சூழல் இரு நாட்டுக்கும் இடையேயான உறவை மோசமாக்கு மோ என்ற அச்சம் நீடித்து வந்தது. இந்தச் சூழலில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பேட்டியளித்த ரஹ்மான் வங்க தேசமே முதன்மை என்ற அடைப்ப டையில் புதிய அரசு செயல்படும்; அண்டை நாடுகளும் இணக்கமான உறவை தொடர்வோம் என கூறி இருந்தார். இதனைத்தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவரின் பேட்டியும் இருநாட்டு உறவு தொ டர்பான கொள்கையை வலுப் படுத்துவதாகவே உள்ளது. 2024 இல் நடந்த போராட்டங்க ளின் போது நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் குற்றச் செயல்களில் குற்றம் சாட்டப்பட்ட ஹசீனா, அவாமி லீக் கட்சி தலைவர்கள் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என்று ஆலம்கீர் உறுதியாக கூறியுள்ளார். அதேபோல கடந்த 17 மாதங்களாக ஹசீனாவை ஒப்படைக்குமாறு இடைக்கால அரசாங்கம் கோரிக்கை விடுத்தும் இந்தியா இன்னும் பதிலளிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். விவாதிக்க வேண்டிய முக்கியப் பிரச்சனைகள் ஆலம்கீர் இந்தியாவுடன் விவா திக்கப்பட வேண்டிய பல முக்கியமான பிரச்சனைகளும் உள்ளன என்பதை சுட்டிக்காட்டினார். இரு நட்டு எல்லையில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்தும், இரு நாடுகளுக்கும் இடை யிலான கங்கை நீர் ஒப்பந்தம் (Farakka water) 2027 இல் புதுப்பிக்கப்பட வேண்டியுள்ளதால், அது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். “இந்தியாவுடன் நாம் போர் புரிய முடியாது; பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு. இந்தியாவுடன் போர் பற்றி பேசுபவர்கள் விவேகமற்றவர்கள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
