இன்று நாம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டது – இப்ராஹிம் தரோர்
இன்று நாம் எதிர்கொள்ளும் பயங்கரவாதம் ஏகாதி பத்தியத்தால் உருவாக்கப்பட்டது என புர்கினோ பாசோ நாட்டின் ஜனாதிபதியான கேப்டன் இப்ராஹிம் தரோர் தெரிவித்துள்ளார். மே 9 ரஷ்யாவில் நடைபெற்ற உலகப்போர் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்றிருந்தார். ஒரு செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் அவர் இன்று எங்கள் நாட்டில் புர்கினோ பாசோவை சேராத வெளி நாட்டு குற்றவாளிகள் நிறைய உள்ளனர். அவர்கள் பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல் படுகின்றனர்.
அந்த பயங்கரவாதிகளை பயிற்றுவிக்க வெளிநாடு களில் இருந்து பயிற்சியாளர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சியைத் தருகிறார்கள். “உண்மையில் அது வெறும் பயங்கரவாதம் மட்டுமல்ல, அது ஏகாதிபத்தியம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ஏகாதிபத்தியத்தின் நோக்கமே எங்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான போர் தொடர வேண்டும் என்பது தான். அப்படி தொடர்ந்தால் எங்களது வளர்ச்சி தடைபடும். எங்கள் வளத்தை அவர்க ளால் கொள்ளையடிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். மேலும் அந்த பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புர்கினோ பாசோ ரஷ்யாவுடன் நெருங்கிய உறவு களை கொண்டுள்ளது.
பயங்கரவாதத்தை எதிர்கொள்வ தற்கான தொடர் போராட்டத்தில் புர்கினோ பாசோவிற்கு ரஷ்யா தொடர் உதவிகளை செய்து வருகிறது. 2022 ஆண்டின் பிற்பகுதியில் இப்ராஹிம் அந்நாட்டின் ஆட்சியைப் பிடித்தார். ஜனாதிபதியாக பதவியேற்ற மூன்று மாதங்களில் 2023 ஜனவரி மாதம் அந்நாட்டில் இருந்த பிரான்ஸ் நாட்டின் ராணுவத்தை வெளியேற உத்தரவிட்டார். அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக்கு எதிரான இவரது ஆட்சியை கவிழ்க்க கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சதி நடந்தது. அதனை அந்நாட்டு ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.