world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நேதன்யாகுவை மீண்டும்  புறக்கணித்த டிரம்ப்  சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக டிரம்ப் சென்றுள்ளார். இப்பயணத்தில் அவர் இஸ்ரேலுக்கு செல்ல மாட்டார் எனவும் இது நேதன்யாகுவை புறக் கணிக்கும் செயல் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தை மற்றும் ஹவுதி அமைப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் கப்பல்கள் மீதான தாக்குதலை நிறுத்து வதற்கான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி நேதன்யா குவை டிரம்ப் புறக்கணித்துள்ளார். சமீபத்தில் அவர் நேதன் யாகுவை தொடர்ந்து புறக்கணிப்பதாகக் கூறப்படுகிறது.  

அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த ஈரான்

 அணுசக்தி உள்கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்ற அமெரிக்கா வின்  கோரிக்கையை ஈரான் நிரா கரித்துள்ளது. ஈரானின் அணுசக்தி நட வடிக்கைகள் அமைதியான ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய அந்நாட்டின் ஜனாதிபதி பெசெஷ்கியான் “நாங்கள் அமைதியை விரும்பு வதால் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்து கிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில்  குண்டுவெடித்து  13 பேர் பலி  

இந்தோனேசியாவில் வெடிகுண்டுகளை செய லிழக்கச் செய்யும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு வீரர்கள் மற்றும் ஒன்பது உள்ளூர் மக்கள் என 13 பேர் பலியாகியுள்ளனர். உள்நாட்டு நேரப்படி காலை 9:30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது. வெடி குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணியின் போது பொது மக்கள் எப்படி அவ்வளவு அருகில் சென்றார்கள். ஏன் சென்றார்கள் என பின்புலகாரணங்களையும் விசாரிக்கும் பணி நடைபெறுவதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க முதலாளிகள் கொடுத்த நெருக்கடி : சீனா மீதான வரிகளை குறைத்த டிரம்ப்! 

வாஷிங்டன், மே 13 - அமெரிக்க பெருமுதலாளிகள் அளித்த நெருக்கடிகளால் சீனா மீதான வரிகளைக் குறைக்கும் நிலைமைக்கு டிரம்ப் இறங்கி வந்துள்ளார். சீனா மீதான வரிகளை 145 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதமாக, அவர் குறைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டா வது முறையாக பதவிக்கு வந்த டொனால்டு டிரம்ப், சீனா, கனடா, இந்தியா, மெக்சிகோ என சுமார் 90-க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். சில நாட்களில், ஏனைய அனைத்து நாடுகள் மீதான வரி உயர்வை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த டிரம்ப், சீனாவுக்கு விலக்களிக்க மறுத்து விட்டார். மாறாக, சீனா மீது மட்டும் சுமார் 145 சத விகிதமாக வரியை அதிகரித்தார். சீனா வும் பதிலுக்கு அனைத்து விதமான அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 125 சதவிகித வரிகளை விதித்தது.  வரிகளை அமெரிக்கா உயர்த்திய போதே, இதனை போட்டியாக கருதி, நாங்கள் மேலும் முன்னேறுவோம் என்று  சீனா அறிவித்தது. அத்துடன், அமெரிக்கா வின் வரி விதிப்புகளை எதிர்கொள்ளவும், அமெரிக்கா தவிர்த்த பிற நாடுகளுடன் தனது பொருளாதார உறவுகளை பலப் படுத்தவும் சீனா பல்வேறு முயற்சிகளில் இறங்கியது. எங்கள் கதவுகள் முன்பை விட இன்னும் அகலமாக திறக்கும். சீனா அனை வருடனும் பொருளாதார உறவுகளை அதி கரிக்க தயாராக உள்ளது என சீன ஜனாதி பதி ஜி ஜின் பிங் அழைப்பு விடுத்திருந்தார்.  இதனிடையே, சீனாவுக்கு எதிரான வரி அதிகரிப்பு நிலைபாட்டை அமெரிக்கா வால் தொடர முடியவில்லை. அங்குள்ள  பெருமுதலாளிகள், டிரம்பிற்கு நெருக்கடி களைக் கொடுக்க ஆரம்பித்தனர். அமெரிக்க முதலாளிகள் விரும்பும் சீன சந்தை           சீனா சென்ற முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா நிறுவனத்தின் சிஇஒ, ‘வர்த்தக தடைகள் இருப்பினும் முடிந்த வகை களில் எல்லாம் சீனாவுடனான பொருளாதார உறவை தொடர்வோம். சீனாவின் சந்தை  எங்களுக்கு முக்கியமானது’ என தெரி வித்தார். இதே போல அமெரிக்காவின் மிக பெரும் கோடீஸ்வரரான வாரன் பப்பெட்டும், டிரம்பின் வரிகொள்கையைக் கடுமையாக விமர்சித்தார்.  நவதாராள பொருளாதார கொள்கை யின் அடிப்படையே, எல்லைகளைக் கடந்து, தங்கள் உற்பத்திக்கும் லாபத்திற்கும் ஏற்ற நாட்டில் முதலீடு செய்ய முடியும் என்பது தான். ஆனால், அதையே டிரம்பின் வரிக் கொள்கை தடுக்கிறது எனும் போது, எப்படி ஏற்க முடியும்? என்று பெருமுத லாளிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர். குறிப்பாக, சீனாவுடனான வர்த்தகம் அமெரிக்கா நிறுவனங்களுக்கு முக்கியமான தாக மாறியுள்ள சூழலில் அவர்கள் டிரம்ப்  நடவடிக்கையை ஏற்கத் தயாராக இல்லை.  டிரம்ப் அரசுக்கு நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்தனர். இந்தப் பின்னணியிலேயே, ஜெனீவா வில் அமெரிக்கா - சீனா அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், உயர்த்தப்பட்ட வரியை 90 நாட்களுக்கு இரு நாடுகளும் நிறுத்தி வைக்க ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், சீனா மீதான வரியை 145 சதவிகி தத்திலிருந்து 30 சதவிகிதமாக அமெரிக்கா குறைப்பது, பதிலுக்கு, அமெரிக்கா மீதான வரியை சீனா 125 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது.