world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இனப்படுகொலைக்கு உதவும்  இங்கிலாந்து மீது வழக்கு தொடுப்பு 

இஸ்ரேலுக்கு ராணுவ விமான பாகங்களை இங்கிலாந்து விற்பனை செய்தது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என அந்நாட்டு அரசின் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு, ஆக்ஸ்பாம், பாலஸ்தீன உரிமைகள் சங்கம் ஆகியவை இந்த வழக்கில் இணைந்துள்ளன. இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் இனப்படுகொலையைத் தடுக்கும் “சட்டப்பூர்வக் கடமையை” நிலைநிறுத்த இங்கிலாந்து தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காங்கோவில் மோசமடையும்  சுகாதார நெருக்கடி 

உள்நாட்டுப் போர், காலரா தொற்றுக்கு இடையே தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம்  காங்கோவின் சுகாதார நெருக்கடியை மிக மோசமானதாக மாற்றியுள்ளதாக ஐ.நா  மனிதாபிமான அமைப்பு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மே 8 முதல் 9 வரை பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். போதிய சுகாதார வசதி இல்லாததால் காலரா தொற்று தீவிரமடைவதுடன் புதிய நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை துரத்தும்  மைக்ரோசாப்ட் நிறுவனம் 

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சுமார் 6,800 தொழி லாளர்களை பணியில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2,28,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன்பு அதிகபட்சமாக 2023 இல் 10,000 பேரை பணியில் இருந்து நீக்கியது மைக்ரோசாப்ட் நிறுவனம். தற்போது மீண்டும் அதிகப்படியான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

காசாவில் நள்ளிரவில் தாக்குதல்

காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய இனப்படுகொலை தாக்குத லில் 65 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வடக்கு காசாவில் மட்டும்  சுமார் 45 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. காசா மீதான தாக்குதலை நிறுத்த வும் அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை தடையின்றி அனுப்பவும் தங்கள் வசம் இருந்த கடைசி அமெரிக்கப் பணயகைதியை விடுவித்த பிறகு இத்தாக்கு தலை நடத்தியுள்ளது இஸ்ரேல்.

புற்றுநோய் ஆராய்ச்சி நிதியை வெட்டிய டிரம்ப் 

அமெரிக்காவில் சுகாதாரத் துறைக்கான நிதி சுமார் 13.5 பில்லியன் டாலர்கள் நிதியை டிரம்ப் தலைமையிலான அரசு வெட்டி யுள்ளது என அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் அமைத்த ஆய்வுக்குழு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சுமார் 300 டாலர்கள் நிதியை யும் வெட்டியுள்ளார். இதில் சுகாதாரத்துறைக் கான சுமார் 1,660 மானியங்கள் அடங்கும். இது நாட்டின் சுகாதாரத்துறையை மிக மோசமான நிலைக்கு தள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.