சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வருகை
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு வர உள்ள தாக தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியாவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞா னிகள் குழுவைச் சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விண்வெளியில் ஒன்பது மாதங்கள் இருந்த போது தனது விண்கலம் இமயமலையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் இந்தியா ‘அற்புதமாக’ இருப்பதைக் கண்டேன். இஸ்ரோ பணிக்கு வரவிருக்கும் இந்திய விண்வெளி வீரர்களை உற்சாகப் படுத்துவேன் என்றார்.
எரிவாயுக் குழாய் வெடித்து பெரும் தீ விபத்து
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே புறநகர் பகுதியில் பூமிக்கு அடியில் செல்லும் எரிவாயுக்குழாய் திடீரென வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ ஜுவாலைகள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு தெரியும் வகையில் பல அடி உயரத்திற்கு தீ எரிந்தது. இதனால் அருகாமையில் உள்ள குடியிருப்புவாசிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் 12 நபர்கள் படுகாயமடைந்தனர். 82 நபர்கள் விபத்தில் இருந்து மீட்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
புர்கினா பாசோவின் ராணுவ முகாம் மீது கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்புக்கான தன்னார்வத் தொண்டர்கள் (VDP) உட்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு காவல்துறை மற்றும் மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். அல்-கொய்தா உள்ளிட்ட பயங்க ரவாதக் குழுக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கிப்லி புகைப்படத்தை கட்டணமின்றி உருவாக்கலாம்
அனைவரும் சாட் ஜிபிடி மூலம் கிப்லி வகை புகைப்படத்தை உருவாக்கலாம். கடந்த சில நாட்களாக உலகெங்கும் சாட் ஜிபிடி மூலம் உருவாக்கப்பட்ட கிப்லி வடிவ புகைப்படங்கள் பிரபலமாகி வந்தன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கிப்லி புகைப்படத்தை உருவாக்க முயன்றதால் சாட் ஜிபிடி நெருக்கடியை எதிர்கொண்டது என சாம் ஆல்ட்மேன் தெரிவித்திருந்தார். தற்போது கட்டண பயனர்கள் மட்டுமின்றி அனைவரும் கிப்லி புகைப்படத்தை உருவாக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்
மியான்மர் பலி எண்ணிக்கை 2,700 ஐ கடந்தது
மியான்மரில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இறந்த வர்களின் எண்ணிக்கை 2,700 ஐ கடந்துள்ளது. 4,521 பேர் படுகாயமடைந்துள்ளனர். 441 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அந்நாட்டின் மாநில நிர்வாக கவுன்சில் தலைவர் மின் ஆங் ஹ்லேயிங் செவ்வாயன்று தெரிவித்துள்ளார். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தீர்மானகரமான தருணம் : ஈக்குவடார் இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக அறிவிப்பு
தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் மிகப் பெரிய அரசியல் மாற்றமாக மக்கள் புரட்சிக் கட்சியும் (Citizen Revolution Party), பச்சாகுட்டிக் இயக்கமும் (Pachakutik) இணைந்து ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்க முடிவெடுத்துள்ளன. 2025 பிப்ரவரி 9 அன்று புதிய ஜனாதிபதி யைத் தேர்வு செய்வதற்கான முதல் சுற்றில் எந்த வேட்பாளருக்கும் 50 விழுக்காடு வாக்குகள் கிடைக்காத நிலையில், ஏப்ரல் 13 அன்று இரண்டா வது சுற்று நடைபெறுகிறது. முதல் சுற்றில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற தற்போதைய ஜனாதிபதி டேனியல் நோபோ மற்றும் இடதுசாரிக் கட்சியான மக்கள் புரட்சிக்கட்சி வேட்பாளர் லுய்சா கொன்சாலஸ் ஆகிய இருவரும் தற்போது களத்தில் உள்ளனர். முதல் சுற்றில் நோபோ 44.17 விழுக்காடு வாக்குகளும், கொன்சாலஸ் 44 விழுக்காடு வாக்குகளும் பெற்றிருந்தனர். முதல் சுற்றில் 5.25 விழுக்காடு வாக்குகளு டன் மூன்றாவது இடத்தை பழங்குடி மக்க ளுக்காகக் குரல் கொடுக்கும் இடதுசாரிக் கட்சி யான பச்சாகுட்டிக் இயக்கம் பெற்றிருந்தது. ஏப்ரல் 13 அன்று நடைபெறும் இரண்டாவது சுற்றை இணைந்து சந்திப்பது என்றும், வலதுசாரிக் கொள்கைகள் நாட்டை சிதைத்துக் கொண்டிருப்பதைத் தடுக்கக் கைகோர்ப்பது என்றும் இரு கட்சிகளும் முடிவெடுத்துள்ளன. செயல்திட்ட உடன்பாடு இரு அமைப்புகளும் அனைத்து ஈக்குவடார் மக்களின் நலன்களுக்கானப் பல்வேறு அம்சங்களைக் கொண்ட செயல் திட்டத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன. அனைவரையும் உள்ளடக்குதல், தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான வளர்ச்சி மற்றும் சமூக நீதி ஆகியவை இந்த உடன்பாட்டின் கூறுகளாக வைக்கப்பட்டுள்ளன. கையெழுத்திட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், ஈக்குவடாரின் சிக்கலான அரசியல் நிலைமை யில் இது தீர்மானகரமான தருணமாக மாறி யிருக்கிறது என்றனர். கடந்த காலக் குறைகளைச் சரி செய்ய வேண்டும், வரலாற்று ரீதியாக ஏற்பட்ட மோதல்க ளைத் தவிர்ப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இரு கட்சியினரும் விவாதித்திருக்கி றார்கள்.