அரவங்காடு தொழிற்சாலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை
உதகை, அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் நீலகிரி மாவட்ட இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ. ராசாவிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் அளித்த மனுவில், அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை கார்பரேஷன் ஆக்கப்பட்ட தால் அங்கு செயல்பட்டு வந்த மேல்நிலைப் பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை நிறுத் தப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் மாணவர் சேர்க்கை நடைபெற ஆவன செய்ய வேண் டும். மேலும், தொழிற்சாலையில் பணி நியம னங்களில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் ஏஓசிபி (AOCP) மற்றும் என்சிவிடி (NCVT) சான்றிதழ் படிப்புகளுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலை யங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் வினோத், என்இயூ/ஐஎன்டியூசி தலைவர் ஜோஸி லாசர், சிஎஃப்இடபிள்யூஏ/சிஎஃப்ஏ பொதுச் செயலாளர் பி.சி.அசோகன், சிஎஃப்இ டபிள்யூஏ/சிஎஃப்ஏ தலைவர் எட்வின் விஜய ராஜ், ஓபிசி இடபிள்யூஏ/சிஎஃப்ஏ பொதுச் செயலாளர் கே.மூர்த்தி, எஸ்சி/எஸ்டி சங்கத் தலைவர் வி.வீரபாண்டியன் ஆகியோர் அடங் கிய குழுவினர் ஊட்டிக்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை சந் தித்து மனு அளித்தனர்.