அரசு நிர்வாகத்தை வகுப்புவாதமயமாக்கும் பாஜகவுக்கு எதிராக விரிவான போராட்டம்!
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேட்டி
சீத்தாராம் யெச்சூரி நகர்- மதுரை, ஏப்.3- அரசு நிர்வாகத்தை வகுப்புவாதமயமாக்கி வரும் பாஜகவுக்கு எதிரான விரிவான போராட்டத்தின் அவசியம் குறித்து மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருவதாக கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அடுத்த மாதம் 20-ஆம் தேதி நடத்தவுள்ள நாடுதழுவிய பொது வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு ஆதரவு உள்ளிட்ட முக்கியான இரண்டு தீர்மானங்கள் மாநாட் டில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாநாட்டு வளாகத்தில், வியாழனன்று (ஏப்.3) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியது வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 729 பிரதிநிதி களும் 79 பார்வையாளர்களும் பங்கேற்றுள்ளனர். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் அரசி யல் பரிசீலனை அறிக்கையும், அரசியல் நகல் தீர்மா னமும் மாநாட்டிற்கு முன்பு பெறப்பட்ட திருத்தங்க ளும் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் கட்சி மேற்கொண்ட அரசியல் நடைமுறை உத்தி மற்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் உத்திகள் தொடர்பாக பிரதிநிதிகள் தங்களது கருத் துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.விவாதங்கள் அனைத்தும் ஆக்கப் பூர்வமாகவும் கட்சியை வலுப் படுத்த உதவும் வகையிலும் உள்ளன. எங்களது கட்சி ஜனநாயக முறைப்படி செயல் படும் ஒரு அரசியல் கட்சியாகும். எனவே தான், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதத்திற் காக மாநாட்டிற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசியல் நகல் தீர்மானம் விவாதத்திற்கு விடப் பட்டது. அந்த தீர்மானத்தில் 3,424 திருத்தங்களும் 84 பரிந்துரைகளும் பெறப்பட்டன. இவற்றில் 133 திருத்தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு
எங்களது அகில இந்திய மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மக்களவையில் புதன்கிழமை வக்புவாரிய திருத்தச் சட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனை மக்களவையிலும் எங்களது கட்சி உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். மாநிலங்களவையிலும் இந்த மசோதாவை எதிர்த்து எங்களது கட்சி உறுப்பினர் கள் போராடுவார்கள். அங்கு என்ன நடக்கிறது என் பதை பொறுத்திருந்து பார்ப்போம். வக்பு வாரிய திருத்த மசோதாவை அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாக நாங்கள் பார்க்கிறோம். எனவே அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராடு வோம்.
அமெரிக்காவிடம் பம்மும் ஒன்றிய பாஜக அரசு
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீது வர்த்தகப் போரை துவக்கியுள்ளார். அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்தியப் பொருட்கள் மீது டிரம்ப் நிர்வாகம் 26 விழுக்காடு என கடுமையான அளவிற்கு வரியை விதித்துள்ளது. இதுகுறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம். ஆனால் மோடி அரசு இந்த வரியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும் அமெரிக்காவுக்கு எதிராக எந்த ஒரு நடவ டிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளது. அமெரிக்க அரசின் மிக மோசமான நடவடிக்கையை எதிர்த்துப் போராட துணிச்சலற்று உள்ளது. மோடி அரசின் மிக மோசமான இந்த போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது.
ஆதிவாசி மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்ப்பு
உள்நாட்டைப் பொறுத்தவரை ஒன்றியத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருக்கும் பாஜக அரசு, பல்வேறு மாநிலங்களில் ஆதிவாசி மக்களுக்கு எதி ரான நடடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்க ளின் பூர்வீக நிலத்திற்கு வன உரிமைச் சட்டத்தின் படி சட்டப் பாதுகாப்பு வழங்குவதை உறுதிப் படுத்துவதற்கு பதில் அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அந்த இடங்களை பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வழங்க முயற் சிக்கிறது.
மனுநீதி அடிப்படையில் செயல்பட மோடி அரசு முயற்சி
இது மட்டுமல்ல பாஜக சாதிய முறையை கெட்டிப் படுத்தும் வகையில் பல்வேறு வழிகளில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. மனு நீதி அடிப்ப டையில் செயல்பட முயற்சிக்கிறது. இதற்கு எதி ரான போராட்டத்தை விரிவான தளத்தில் நடத்த வேண்டியுள்ளது. இதுகுறித்தும் எங்களது மாநாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பாஜக அரசின் காவி மயத்திற்கு எதிரான போராட்டத்தோடு அந்த அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கை கள், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கை கள், அரசின் மோசமான அணுகுமுறை குறித்தும், அதற்கு எதிராக மேலும் வலுவாகப் போராட வேண்டி யதன் அவசியம் குறித்தும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்துத்துவா அச்சுறுத்தல்களை முறியடிக்க திட்டம் வகுக்கப்படும்
மத்தியக் குழுவின் சார்பாக, அரசியல் தலைமைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், ஏப்ரல் 2, 2025 அன்று பிற்பகல் அமர்வில் 24-ஆவது மாநாட்டின் வரைவு அரசியல் தீர்மானத்தையும் அரசி யல் பரிசீலனை அறிக்கையையும் அறிமுகப்படுத்தினார். அரசியல் நகல் தீர்மானத்தின் முக்கிய நோக்கம், வளர்ந்து வரும் இந்துத்துவா சக்திகளின் அச்சு றுத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகளை கண்டறிவதாகும். வகுப்புவாத சக்திகள், கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து, மக்களை பிளவு படுத்தும் சித்தாந்தத்தைப் பரப்புகின்றன. பாஜக தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து மூன்று முறை மத்தியில் ஆட்சியில் இருப்பதால், ஆர்எஸ் எஸ் மற்றும் சங் பரிவார் ஆகியவை அரசு அதிகார வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவி முழு நிர்வா கத்தையும் வகுப்புவாத மயமாக்குகின்றன.
கலாச்சாரத் தளங்களிலும் சங்-பரிவாருக்கு எதிராக போராட்டம்
இந்துத்துவாவின் அச்சுறுத்தலை முழுமையாக எதிர்த்துப் போராட, தேர்தல் களத்தில் போராடுவ தோடு, பொருளாதார, சமூக, சித்தாந்த மற்றும் கலாச்சார தளங்களிலும் போராட வேண்டும். இந்துத் துவா சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு, கட்சி யின் சுயேட்சையான பலத்தை கட்டியெழுப்புவது அவசியம் என்று வரைவுத் தீர்மானம் கூறுகிறது. இதற்காக, வர்க்க மற்றும் வெகுஜனப் போரா ட்டங்களை வலுப்படுத்த கட்சிக்கு வரைவுத் தீர்மா னம் அழைப்பு விடுத்துள்ளது. இடதுசாரி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய தன் அவசியத்தையும், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் இந்துத்துவா வகுப்புவாதக் கொள்கைகளுக்கு எதி ரான போராட்டத்தில் இணையத் தயாராக உள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கட்சி களையும் அணிதிரட்ட வேண்டியதன் அவசியத்தை யும் வரைவுத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானத்தின் மீது வியாழக்கிழமை வரை 18 பிரதி நிதிகள் உரையாற்றியுள்ளனர்.
மே 20 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு
மாநாட்டின் முதல் நாளன்று (ஏப். 2) தீர்மானங் கள் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்திய தொழிற் சங்கங்கள் மே 20 அன்று அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 29 தொழி லாளர் நலச்சட்டங்களை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், ஒன்றிய பாஜக அரசானது, அதனை நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களாக மாற்றிய மைத்துள்ளது. இந்த தொகுப்பை ரத்து செய்யக் கோரி நடைபெறும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்று பட்ட போராட்டத்திற்கு கட்சியின் மாநாடு முழு ஆதர வைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த பொது வேலை நிறுத்தத்தை தீவிரமாக ஆதரிக்குமாறு கட்சியின் அனைத்து வெகுஜன அமைப்புகளுக்கும் மாநாடு அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தீர்மானத்தை மத்தியக்குழு உறுப்பினர் கே. ஹேமலதா முன்மொழிந்தார். மத்தியக்குழு உறுப்பினர் அமியா பத்ரா வழிமொழிந்தார்.
வகுப்புவாத வன்முறைக்கு எதிரான தீர்மானம்
‘ஆர்எஸ்எஸ் - பாஜக மற்றும் சங் பரிவாரின் கொடூரமான வகுப்புவாத தாக்குதல்களை எதிர்த்தல்’ என்பது இரண்டாவது தீர்மானமாகும். இதை மத்தி யக்குழு உறுப்பினர் பி. ராஜீவ் முன்மொழிய, மது கார்க் வழிமொழிந்தார். இவ்வாறு பிருந்தா காரத் கூறினார். பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். மத்தியக்குழு உறுப்பினர் அருண்குமார், மாநில செயற்குழு உறுப் பினர் க. கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.