tamilnadu

img

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்களுக்கு 8ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி ஒன்றிய, மாநில ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசின் ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பின் தலைவர் டி.புருஷோத்தமன், ஒன்றிய அரசின் ஓய்வூதியர்சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயராமன் ஆகியோர் தலைமை தாங்கினார். இதில் மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களின் தலைவர்கள்  ஆர்.மனோகரன்,  ஆர்.நடராஜன், ச.சிவராமன், கோ.சுந்தரமூர்த்தி, கோ.பழனி, எஸ்.கண்ணுசாமி,  மத்திய அரசு ஓய்வூதிய சங்கங்களின் தலைவர்கள் என்.மேகநாதன், பி.சாந்தகுமார், ஐ.எம். மதியழகன், பி.வி.சேகர், ஆர்.ஸ்ரீதர், பி.கே. வெங்கட்ரமணி, எம்.மருதவாணன், வி.சுகுமாரன், கே.விஜய் ஆனந்த் ஆகியோர் பேசினர். ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் என்.காசிநாதன் நன்றி கூறினார்.

ஓய்வூதியர்களை பாகுபடுத்தும் நிதி மசோதா திருத்த பிரிவுகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவட்டத் தலைவர் பா.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  லட்சுமி நாராயணன், நாகராஜன்,  நீதிமாணிக்கம், பச்சையப்பன், பி.சரவணன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.