india

img

மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீது 12 மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்று, நேற்று நள்ளிரவு 2 மணிக்கு மேல் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது. 
இம்மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பி-க்களும், எதிராக 95 எம்.பி-க்களும் வாக்களித்தனர். திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற தமிழ்நாட்டு எம்.பி-க்கள் அனைவரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்த நிலையில், ஜி.கே.வாசன் ஆதரவாக வாக்களித்தார்; அன்புமணி ராமதாஸ் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 
இந்த நிலையில், இம்மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.