tamilnadu

img

“மனித உரிமை மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”  தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்

“மனித உரிமை மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”

 தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்

திருப்புவனம், ஜூலை 4 - தமிழகத்தில் மனித உரிமை மீறல்களைத் தடுக்க நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவ னம் மடப்புரத்தில் கோயில் ஒப்பந்த  காவலாளி அஜித்குமார் காவல்துறை யினரின் தாக்குதலில் உயிரிழந்த நிலை யில், அவரது குடும்பத்தினரை, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வியாழனன்று (ஜூலை 3) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: “காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். தமிழகத்தில் காவல்துறை யினரின் மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்ப வத்தில் இதுவரை யாரும் தண்டிக்கப்பட வில்லை. தற்போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன.  

விரைவான நடவடிக்கை தேவை

இதுபோன்ற காவல்நிலைய மரணங் களில் தமிழக அரசு விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும். அஜித்குமார் மரணம் தொடர்பாக இன்னும் வெளிவராத தக வல்கள் உள்ளன. தலைமைச் செயலகத்தி லிருந்து யாரோ ஒருவரின் அழுத்தத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என பலர் பேசுகின்ற னர். ஆனால் யார் அந்த ஐஏஎஸ் அதி காரி என வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. அந்த அதிகாரியின் அடையாளம் வெளிப்படுத்தப்படவேண்டும். நிகிதா என்பவரும் அவரது தாயாரும் யாருடைய கார் மூலம் வந்தார்கள் என்ற விவரமும் தெரிய வேண்டும். இதுபோன்ற பல முக்கிய மான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.  

மனித உரிமைகளின் முக்கியத்துவம்

காவல்துறை அதிகாரிகள் மனித உரிமைகளை மதிப்பதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என நினைத்துக் கொள்கின்றனர். மனித உரிமைகளும், மனித உயிர்களும் எல்லா வற்றையும் விட மேலானவை. அவற்றை பறிப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடி யாது. டிஜிபி தமிழகம் முழுவதும் தனிப்படை கள் கலைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இதுவரை எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் தனிப்படைகள் மூலம் செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது. மதுரை உயர் நீதிமன்றம் தலையிட்ட பின்பே  வழக்கு வேகம் எடுத்தது. 6 போலீசார் மட்டுமே இதில் சம்பந்தப் பட்டவர்கள் என மார்க்சிஸ்ட் கட்சி கருத வில்லை. இக்கொலையில் சம்பந்தப்பட்ட வர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன்  நிறுத்தப்பட வேண்டும். சிபிஐ விசார ணைக்கு தமிழக அரசு முழுமையாக ஒத்து ழைக்க வேண்டும். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.