tamilnadu

img

மக்களவையில் 78 பெண்  எம்.பி-க்கள் 

புதுதில்லி:
கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 64 பெண்கள் எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். தற்போது 17-ஆவது மக்களவைத் தேர்தலில், 78 பெண்கள் வெற்றிபெற்று எம்பிக்களாக பதவியேற்க உள்ளனர். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாததாகும். உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக தலா 11 பெண்களும், ஒடிசாவில் 7 பேரும், தமிழகத்தில் 3 பேரும், கேரளம், ஹரியானாவில் தலா ஒருவரும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக சார்பில் மட்டும் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.