முதுநகரில் முறையற்ற கட்டுமானம் பணிகளை நிறுத்திய மேயர்
ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடையை கட்டாமல், ஒப்பந்ததாரர் விருப்பத்திற்கு கடைகள் கட்டியதால் பணிகளை நிறுத்தவும், நடைபெற்ற பணிக்கு பணம் வழங்குவதையும் நிறுத்த வேண்டும் என்று மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தர விட்டுள்ளார். கடலூர் முதுநகரில் பக்தவச்சலம் சந்தை மற்றும் மீன் சந்தை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் பழைய கட்டிடம் என்பதால் மாநகராட்சி சார்பில் முழுவது மாக இடித்து ஏற்கெனவே இருந்தது போல் 150 கடைகள் புதிதாக கட்டுவதற்கு ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஒரு வருடமாக பணி நடைபெறாமல் தற்போது பணிகள் நடைபெற்று வரு கின்றது. வியாழன்று (ஏப்.3) மேயர் சுந்தரி ராஜா பணிகள் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிதாக கட்டப்படும் வளாகத்தில் 88 கடைகள் மட்டுமே கட்டப்படும் என ஒப்பந்ததாரர் தெரிவித்தார். அப்போது இந்த பகுதிகளில் மீன் மார்க்கெட் மற்றும் பக்தவச்சலம் மார்க்கெட்டில் 150 கடைகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது 88 கடைகள் மட்டுமே கட்டுவதற்கு யார் அனுமதி அளித்தனர்? எந்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர்? உரிய அனுமதி மாநகராட்சியில் சமர்ப்பித்து கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி அளித்தது யார்? வரைபடத்தில் உள்ளது போல் கட்டிடம் கட்டாமலும் பெரிய அளவில் சிமெண்ட் கட்டைகள் அமைக்கப்பட்டது ஏன்? என சுந்தரி ராஜா சரமாரியாக கேள்வி எழுப்பினார். இது மட்டும் இன்றி அங்கு இருந்த மாநகராட்சி அலுவலர்களிடம் 150 கடைகள் முழுமையாக கட்டப்பட்ட பிறகுதான் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்க வேண்டும். மேலும் அவர்கள் உரிய அனுமதி பெற்று கட்டிடம் கட்டப்பட்டதா?, இந்த பகுதியில் 150 கடைகள் கண்டிப்பாக கட்டப்படும் என இங்கு உள்ள வியாபாரிகளுக்கு உத்தரவு அளித்ததன் பேரில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர். மேலும் இது தொடர்பாக துணை முதல மைச்சர், துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக புகார் அளித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேயர் உறுதியாக கூறினார். மாநக ராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில் உடன் இருந்தார்.