india

img

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு!

மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், அவையின் வேலை நேரம் 118 சதவிகிததிற்கும் அதிகமாக இருந்ததாகவும் மக்களவை சாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.