ஆதரவை திரும்ப பெறுகிறார் சுயேட்சை எம்எல்ஏ
துச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் ஆட்சி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் அரசுக்கு அருதி பெருபான்மை இருந்தபோதிலும் ஏனாம் சட்டமன்ற சுயேட்சை உறுப்பினர் கொல்லப்பள்ளி ஸ்ரீ நிவாஸ் அசோக் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்நிலை யில் ஏனாம் தொகுதியில் மாவட்ட நிர்வாகம் மக்களின் அடிப்படை பிரச்சனை களை சரிவர செய்வதில்லை என்றும், குப்பையை கூட தூர்வாரி அப்புறப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்று ஒரு மாத காலமாக அரசிடம் புகார் தெரிவித்து வந்தார். இந்நிலையில் இப் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாததால் சுயேட்சை உறுப்பினர் ஸ்ரீ நிவாஸ் அசோக் புதுச்சேரி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற போவதாக ஏனாமில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தென்பசார் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடிமனைப் பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளித்தனர்.
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடியிருப்பு வீடு கட்டும் திட்டங்களின்கீழ், ஊராட்சிகளில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.