tamilnadu

img

கார்ப்பரேட் மதவெறி கூட்டணிக்கு எதிராக இடதுசாரிகள் ஒன்றிணைந்த இயக்கம்

கார்ப்பரேட் மதவெறி கூட்டணிக்கு எதிராக இடதுசாரிகள் ஒன்றிணைந்த இயக்கம்

சிபிஐ பொதுச்செயலாளர் து. ராஜா அழைப்பு

இந்திய நாட்டின் பாதுகாப்பான வருங்காலத்திற்கும், அனைத்துத் தரப்பு இந்திய மக்களின் நலன்க ளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்த லாக உள்ள கார்ப்பரேட் மதவெறி கூட்டணிக்கு எதிராக மிகவும் வலிமை வாய்ந்த வெகுமக்கள் போ ராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசிய பொதுச்செயலாளர் து. ராஜா வலியுறுத்தியுள்ளார். இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் ஒன்றாய்க் கரம் கோர்த்து இதற் கான முன்னெடுப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மதுரையில் புதன்கிழமை (ஏப்.2) காலை துவங்கிய மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிய து. ‌ராஜா, பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தி இந்தியா விடுதலை அடைவதற்கு அனைத்து மக்களும் ஒற்றுமையாகப் பாடுபட்டதைப் போல, தற்போது ஆர்எஸ்எஸ் பிஜேபி மதவெறி கூட்டணியின் கொடுமைகளிலிருந்து, தேசத்தை விடுவிக்க அனைவரும் ஒற்றுமை யாகப் பாடுபட வேண்டும் என்று கூறினார்.  அவர் மேலும் கூறியதாவது: உலகம் முழுவதும் ஏகாதி பத்திய சக்திகளின் அதிதீவிர செயல்பாடுகளினால் சமத்துவ மின்மை முன்னெப்போதும் இல் லாத வகையில் அதிகரித்து வரு கிறது. இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் பல் வகைப்பட்ட நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.

அதிகரித்து வரும் தாக்குதல்கள்

இந்தியாவில் வகுப்புவாத ஆட்சியாளர்கள் மக்களின் அடிப்ப டைப் பிரச்சனைகளைத் திசைதிருப் பும் வகையில் தொழிலாளர்களி டையே பிரிவினையையும் மோ தல்களையும் திட்டமிட்டு உரு வாக்கி வருகிறார்கள். மதவெறி வன் முறைகள் நாட்டின் பல பகுதிகளி லும் தூண்டி விடப்படுகின்றன. பட்டி யலின, பழங்குடியினர், சிறு பான்மையினர் மற்றும் விளிம்பு  நிலை மக்களின் மீதான தாக்குதல்க ளும், வன்கொடுமைகளும் அண் மைக் காலங்களில் தீவிரமடைந் துள்ளன. விவசாய நெருக்கடிகள் அதிகரித்துள்ளதோடு, விவசாயி களின் கோரிக்கைகளை அலட்சி யம் செய்து, அவர்களது போராட் டங்களைக் கடுமையான அடக்கு முறை மூலம் ஒடுக்க முயல்கிறது ஒன்றிய அரசு. தங்களுக்கு நெருக்க மான கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக பாஜக அரசு போலி தேசியவாதம் பேசுவதை யும் நாடு பார்த்து வருகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியல மைப்புச் சட்டத்தையும், மதச்சார் பின்மை கொள்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்து, கடும் எதிர்ப்பைத் தெரி வித்த ஆர்எஸ்எஸ் அமைப்பு, இன்று அதன் அரசியல் கருவியாக உள்ள பாஜக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ள சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அரசி யலமைப்புச் சட்டத்தின் அடிப்ப டை அம்சங்களையே சிதைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சித்தாந்தப் போர் அவசியம்

சர்வாதிகாரி முசோலினியிடமி ருந்து நேரடியான ஆலோசனை களையும், அறிவுரைகளையும் பெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பு, இன்று இந்தியாவில் ஒற்றை எதேச்சதிகார ஆட்சி முறையைக் கொண்டு வருவதற்கான தீவிர நட வடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய பின்புலத்தில், ஆர்எஸ்எஸ் - பாஜக அரசின் மதவெறி, பிற்போக்கு நிகழ்ச்சி நிரல்களுக்கும் சீர்கேடுகளுக்கும் எதிராக ஒரு வலிமையான சிந்தாந் தப் போரை உடனடியாக நடத்த வேண்டியுள்ளது. மக்களிடையே மதவெறிக் கும்பல் நடத்தும் மூட நம்பிக்கை பிரச்சாரங்களை முறியடிக்கும் வித மாக அறிவியல் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்பட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஜனநாயகப்படுத்தப்பட்டு அனைவ ருக்கும் கிடைக்கும் வகையில்  உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வன்மம் நிறைந்த  ஆளும் வர்க்கம்

ஆளும் வர்க்கத்தின் வன்மம் நிறைந்த கொள்கைகளால் தாக்கு தலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாகி உள்ள அனைத்துப் பிரிவு மக்களையும் ஒன்று திரட்டி, வலு வான போராட்ட இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வோம். உலகெங்கிலும் தியாகசீலர்கள் உயர்த்திப் பிடித்த செங்கொடியின் கீழ் அணிவகுத்து, மார்க்சிய - லெனினிய வெளிச்சத்தில் ஒற்று மையுடன் பாடுபட உறுதி ஏற்போம். அந்த வழியில் சிபிஎம் அகில இந்திய மாநாடு மகத்தான வெற்றி  பெறட்டும். லால் சலாம். இன்குலாப் ஜிந்தாபாத்! இவ்வாறு து‌. ராஜா பேசினார்.