tamilnadu

img

வாழைத்தார்கள் விலை உயர்வு

வாழைத்தார்கள் விலை உயர்வு

கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைத்தார் ஏல விற்பனையில் வாழைத்தார் கள் விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்து உள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப் பளவில் விவசாயிகள் கதளி, நேந்திரன், செவ்வாழை, தேன்வாழை, பூவன், ரஸ்தாளி உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் வாழை சாகு படி செய்து வருகின்றனர். வாழை சாகுபடி யில் அறுவடை செய்யும் வாழைத்தார்களை கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெறும் ஏலத்தில் கலந்து கொண்டு விற்பனை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதனன்று ஏல விற்பனை நடை பெற்றது. இதில், கடந்த வாரம் கதளி, நேந் திரன் கிலோ ஒன்று 40 ரூபாய்க்கு விற்பனை யான வாழைதார்கள் புதனன்று நடைபெற்ற ஏலத்தில் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்து கிலோ ஒன்றுக்கு 55ரூபாய் முதல் 60 ரூபாய் வரைக்கு விற்பனை ஆனது. இதே போல் கடந்த வாரம் குறைந்த விலைக்கு விற்பனை ஆன தேன்வாழை, செவ்வாழை இந்த வார விற்பனையில் தார் ஒன்று 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரைக்கும் பூவன், ரஸ்தாளி உள்ளிட்ட வாழைதார்கள் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையில் விற்பனை ஆனது. புதனன்று நடைபெற்ற ஏலத்தில் சுமார் பத்தாயிரம் வாழைதார்கள் வந்திருந்த நிலையில், வாழைத்தார்களை வியாபாரி கள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத் தனர். மேலும், வரும் நாட்களில் தொடர் விஷேச தினங்கள் மற்றும் உள்ளூர் திருவிழாக்கள் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வந்த வியாபாரிகள் கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாழைத் தார் ஏலத்தில் வாழைத்தார்களை போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனர். இத னால் வாழைத்தார்களின் விலை உயர்ந்து காணப்பட்டு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் தனர்.