tamilnadu

img

மாமேதை காரல் மார்க்ஸ் சிலை சென்னையில் நிறுவப்படும்

மாமேதை காரல் மார்க்ஸ் சிலை சென்னையில் நிறுவப்படும்

மாமேதை காரல் மார்க்ஸ் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (ஏப்.3) பேரவை விதி எண்.110-இன் கீழ் 2 அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 

வரலாற்றின் தலைமகன் உலக மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களைப் பெருமைப் படுத்திட, போற்றிட தமிழக அரசு விரும்புகிறது.“உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனை வருக்குமான ஒரே முழக்கமாக பொது வுடைமைத் தத்துவத்தை வடித்துத் தந்த  புரட்சியாளர் காரல் மார்க்ஸ். இழப்ப தற்கு என்று எதுவும் இல்லை-பெறு வதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைப்ப வர்! அறிவுலகத் தொலைநோக்கு சிந்தனையாளர்! வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாக போற்றப்படுபவர் காரல் மார்க்ஸ். ‘எல்லார்க்கும் எல்லாம்’ உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல்வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான். அப்படிப்பட்ட ‘எல்லார்க்கும் எல்லாம்’என்ற சிந்தனை யோடு தான், அவரது நினைவு நாளான கடந்த மார்ச் 14-ஆம் நாள், நம்முடைய நிதிநிலை அறிக்கையை இந்தப் பேரவையில் தாக்கல் செய்தோம். மிகச் சரியாக எழுதியவர் மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக இந்தியாவைப் பற்றி எழுதியவர் இவர்தான். “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குல மரபுகள், சாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்றுசேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது புவியியல் ஒற்றுமை தான் இந்தியா என்று அழைக்கிறோம். இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாற வில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்” என்று எழுதியவர் காரல் மார்க்ஸ். சென்னையில் கோலோச்சிய இயக்கம் அதனால்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழ் மொழி பெயர்ப்பை முதன் முதலாக 1931-ஆம் ஆண்டு வெளியிட்டார் தந்தை பெரியார் அவர்கள்.  அத்தகைய மாமேதை மார்க்ஸ் உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இந்த  மன்றத்தில் அறிவிப்பதில் பெருமை யடைகிறேன். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது”. இவ்வாறு முதல்வர் பேசினார்.  சிபிஎம் வரவேற்பு முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி பேசுகையில், “ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தின் மகத்தான சிந்தனையாளர் என்று உலகமே போற்றும் மகத்தான தலைவர் காரல் மார்க்ஸ் ஆவார். மார்க்ஸ் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்த நேரத்தில்,காரல் மார்க்ஸ் சிலை தமிழகத்தில் அமை யாதா? என்கிற ஒரு சிந்தனையோடு இருந்த எங்களுக்கு முதலமைச்சர் தக்க நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24 ஆவது அகில இந்திய மாநாடு  மதுரையில் ஏப்ரல் அன்று 2 துவங்கி, 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் இன்று (ஏப்.3) நடை பெறும் கருத்தரங்கில் கேரள முதல்வருடன் நமது முதல்வரும் பங்கேற்று  உரையாற்றுகிறார். இந்த  சூழலில் இந்த அறிவிப்பு என்பது  மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரையில் பங்கேற்றிருக்கும் எங்கள் தோழர்களுக்கு உற்சாகத்தை யும் மிகப்பெரிய மகிழ்ச்சியையும் அளிக்கும். மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பிலும் என் சார்பிலும்  மார்க்ஸை நேசிக்கும் அனைவர் சார்பிலும் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன்”என்றார். அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் மேசையை தட்டி வரவேற்றனர்.  சட்டமன்றமே வரவேற்பு இதைத் தொடர்ந்து, டி.ராமச்சந்தி ரன் (சிபிஐ), கு.செல்வப்பெருந்தகை (காங்.), நயினார் நாகேந்திரன் (பாஜக), கோ.க.மணி (பாமக), சிந்தனை  செல்வன் (விசிக), வேல்முருகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், அப்துல் சமது உள்ளிட்ட அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் சென்னையில் மார்க்ஸ் சிலை நிறுவப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்பதாக கூறினர். சிபிஎம் கோரிக்கை ஏற்பு! திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், அந்த மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த லெனின்  சிலையை அகற்றியது. இதன் மூலம் ஒரு தத்துவத்தை தகர்த்து விட்டதாக கொக்கரித்துக் கொண்டது.  தமிழ்நாட்டில் சிபிஎம் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தில் லெனின் சிலை நிறுவப்பட்டது. இந்த நிலையில்தான், நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை , சென்னை யில் காரல் மார்க்ஸ்க்கு சிலை நிறுவ  வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  முன்னதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட தலைவர்கள் முதல்வரை சந்தித்து மார்க்ஸ்-க்கு சிலை அமைக்கக் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சிபிஎம் சட்டமன்றக்குழு தலைவர் நாகை மாலி, என். சின்ன துரை இருவரும் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கும் கடிதம் கொடுத்தனர். மேலும், செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.