headlines

img

வக்பு சொத்தை சூறையாடும் சட்டத்தை கைவிடுக!

வக்பு சொத்தை சூறையாடும் சட்டத்தை கைவிடுக!

ஒரு தவறை சரியானது போலவும் அநியாயத்தை நியாயமானது போலவும் பேசுவதும் செய்வதுமே ஆர்எஸ்எஸ்- பாஜக  கூட்டத்தின் வேலை. குறிப்பாக சிறுபான்மை  முஸ்லிம் மக்களுக்கு எதிரான கருத்துக்களை முதலில் நல்லது போல விதைப்பார்கள்; தொடர்ந்து பரப்புவார்கள், பின் நீதிமன்றங் களுக்குச் செல்வார்கள். அதையே காரணமாக வைத்து ஒரு சட்டத்தை கொண்டு வருவார்கள். 

அப்படித்தான் தற்போது வக்புதிருத்த சட்ட முன் வடிவை கொண்டு வந்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களைச் செய்திருக்கிறது. 1998ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்  ஒரு சொத்து வக்பு (தங்குதல்) ஆனவுடன் அது என்றென்றும் வக்பு ஆகவே இருக்கும் என்று கூறியது. எனவே அந்த சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. 

ஏனென்றால் வக்பு வரம்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க புதிய மசோதாவில் விதிமுறை உள்ளது. இதன்படி 12 ஆண்டுகளுக்கு மேலாக வக்பு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள், இந்த திருத்தத்தின் மூலம் உரிமையாளர்களாக முடியும். இது மிக மோசமானது.

இதை தவிர வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர் இருவரை நியமித்தல், நன்கொடை வழங்குபவர்கள் கட்டாயம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றியிருக்க வேண்டும், பிரச்சனை ஏற்படும் போது வக்பு நிலத்தை அள வீடு செய்வது உள்பட தீர்வு காண்பது, தீர்ப்பாயம் என்று இருந்ததை மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் வழங்குவது போன்றவை ஏற்கெனவே இருந்த சட்டத்தை முற்றிலும் நீர்த்துப் போகச் செய்து செயலிழக்க வைப்பதாகும். இதுபோல் பல திருத்தங்கள் ஆபத்தானவையே. 

இந்த சட்டத்திருத்தம் வக்பு வாரியத்தின் பிரதான நிலங்களை அரசு கைப்பற்றும் திட்டம் அத்துடன் தீர்ப்பாயத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டு அதன் தீர்ப்புகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் கூறுகிறது. 

இந்த திருத்த சட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மக்களவையில் அறிமுகம் செய்த போதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. தற்போது புதனன்று மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறை வேற்றப்பட்டுவிட்டது. இந்த நாசகர மசோதா அர சியல் சட்டத்துக்கும் முஸ்லிம் மத சுதந்திரத்துக்கும் எதிரானது என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளதோடு சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்த தோடு திமுக சார்பில் சட்ட நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என கூறியுள்ளது வரவேற்புக் குரியது. இந்த மசோதாவை திரும்பப் பெறச் செய்ய அனைத்து தரப்பினரும் முயற்சித்திட வேண்டும்.