articles

img

மனுதர்ம வழியில் நாட்டைப் பின்னோக்கி கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்!

மனுதர்ம வழியில் நாட்டைப் பின்னோக்கி கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம்!

“மனுதர்மத்தின் அடிப்படையில் இந்த நாட்டைப் பின்னோக்கி கொண்டு செல்வ தற்கு கம்யூனிஸ்ட் இயக்கம் ஒருபோதும் அனு மதிக்காது” என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உறுதிபடக் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆவது மாநாடு, மதுரையில் புதன் கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.  ‘முன்னதாக செவ்வயான்று மாலை, தோழர் பி. ராமமூர்த்தி நினைவு வளாகத்தில், “மக்கள் ஜனநாயகப் பாதை’ வரலாற்றுக் கண் காட்சி, புத்தக் கண்காட்சி திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று, அரசியல் தலைமை க்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசினார். அப்போது, “கட்சியின் முன்னாள் பொ துச்செயலாளர் மறைந்த சீத்தாராம் யெச்சூரி, எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முக்கிய அம்சங்களை மக்களிடம் முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறது, என்று கூறுவார்;  முதலாவது, தொழிலாளி வர்க்கம் மீதான முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராகப் போராடுவது, இரண்டாவது, இன்றைக்கும் நிலவி வரும் பிற்போக்குத் தனமான சாதி அமைப்புகள் - சமூக ஒடுக்குமுறைக்கு எதி ராகப் போராடுவது, ஆகியவை தான் அந்த இரண்டு அம்சங்கள். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் தியாக வர லாற்றைக் கொண்டது. நாட்டின் சுதந்திரத் துக்காகப் போராடியதோடு, முதலாளித்துவச் சுரண்டல் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் உயிா்த் தியாகம் உள்பட பல்வேறு தியாகங்களைச் செய்த வர்கள் கம்யூனிஸ்டுகள்.  தேசபக்தியின் அடையாளமும் கம்யூ னிஸ்ட் இயக்கம் தான். நாட்டில் உள்ள விவசாயி கள், மாணவா்கள், உழைக்கும் மக்கள் ஆகி யோரின் உரிமைகளுக்காகப் பாடுபடுவது தான் உண்மையான தேசபக்தி.

இந்த உரிமை களுக்காகத்தான் சுதந்திரப் போராட்டம் நடை பெற்றது. கம்யூனிஸ்டுகள் உள்பட பல தரப்பி னரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.  இன்றைய ஒன்றிய ஆட்சியாளா்களுக்கு தேசபக்தி என்றால் என்னவென்று கூட தெரியாது. நாட்டின் சுதந்திரப் போராட்ட வர லாற்றில் இன்றைய ஆட்சியாளா்களின் பங்கு எதுவும் இல்லை. மோடி தலைமையிலான அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக, மக்களின் உணர்வுகளுக்கு எதிரா ச் செயல்படுகிறது. அரசியலைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுத்து, மனு தா்மத்தின் அடிப்படையில் நாட்டைப் பின்னோக்கி கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். ஆட்சியாளா்களின் இந்த  முயற்சியை கம்யூனிஸ்ட் இயக்கம் அனு மதிக்காது.  மதுரையில் நடைபெறும் 24-ஆவது அகில இந்திய மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மாநி லக்குழுவின் பணி அளப்பரியது. 24-ஆவது மாநாட்டில் உயரப் பறக்கும் செங்கொடியில், இந்திய மற்றும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்களும், அவர்கள் செய்த தியா கங்களும் அடங்கியிருக்கின்ன. இவ்வாறு பிருந்தா காரத் பேசினார்.