அறிஞர், திரைக்கலைஞர்களுக்கு பெ.சண்முகம், கே.பாலகிருஷ்ணன் பாராட்டு
பிஎம் அகில இந்திய மாநாட்டு கருத்தரங்கம் - கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குநர்கள் நடிகர் எம். சசிகுமார், ராஜூ முருகன் ஆகியோருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, மாமேதை மார்க்ஸ் சிலையை நினைவுப் பரிசு வழங்கினர்.
மாமேதை மார்க்ஸுடன் ஒரு செல்பி
மாநாட்டு வளாகத்தில் தோழர்கள் ஆர்வம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு அரங்கத்தின் முகப்பில், மாமேதை மார்க்ஸுடன் தோழர்கள் உட்கார்ந்து செல்பி எடுக்கும் வகை யில், ஒரு செல்பி பாயிண்ட் அமைக் கப்பட்டுள்ளது. இது தோழர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது. மாநாட்டுப் பிரதிநிதிகள் மட்டுமல்ல; மாநாட்டுக் கண்காட்சி அரங்கை பார்க்க வந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் காரல் மார்க்ஸ் அருகில் அமர்ந்து புகைப் படம் எடுத்துக்கொண்டனர். முன்னதாக, செல்பி பாயி ண்ட்டை சிபிஎம் மூத்த தலைவர் முன்னாள் எம்.பி., டி.கே.ரங்க ராஜன் திறந்து வைத்து முதலாவ தாக படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, மூத்த இதழியலாளர் என். ராம், சு. வெங்கடேசன் எம்.பி. ஆகியோரும் புகைப்படம் எடுத் துக்கொண்டனர். தலைவர்களைத் தொடர்ந்து தோழர்கள் ஏராளமானோர் வரிசை யில் காத்திருந்து, மாமேதை மார்க் ஸுடன் படமெடுத்துக் கொண்டனர்.
பொம்மையில் கண்ணை செதுக்கியவுடன் மார்க்ஸ் என்ற மாமனிதரை உணர்ந்தேன்!’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டில் காரல் மார்க்ஸ் சிலையை தத்ரூபமாக வடிவமைத்துள் ளார் சிற்பக் கலைஞர் சரண்ராஜ். மதுரை கீழக்குயில்குடி அருகே உள்ள கரடிப்பட்டி கிரா மம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் அற்புத மான கலைஞர். மதுரை - தேனி சாலையில் மதுரை காம ராஜர் பல்கலைக்கழகம் அருகே இருப்பது தான் கரடிப்பட்டி கிராமம். சென்னையில் உள்ள அரசு நுண்கலைக் கல்லூரியில் சிற்பக்கலையில் பட்டப்படிப்பு முடித்துள்ள சரண்ராஜ், இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றில் பணி யாற்றியுள்ளார். கோவில் சிலைகள் மட்டுமல்ல அம்பேத் கர், காரல் மார்க்ஸ் உள்ளிட்டோரையும் சிற்பங்களாக வடித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு காரல் மார்க்ஸ் சிலையை வடிவமைக்க வேண்டுமென மதுரை மக்களவை உறுப்பினரும் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான சு. வெங்கடேசன் கேட்டுக் கொண்டதையடுத்து, 24 நாட்களில் இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். “நான் உருவாக்கியுள்ள இந்தச் சிற்பம் முத லில் வெறும் பொம்மையாகத் தான் இருந்தது. பொம்மைக்கு கண்ணை வைத்தபோது தான், நான் காரல் மார்க்ஸை உணர்ந்தேன். மனிதர் களைப் பற்றி மட்டுமல்ல, அவர்கள் சமத்துவமாக வாழ வேண்டுமென சிந்தித்த ஒரு மகத்தான தலைவரின் சிற்பத்தை வடிவமைத்ததில் தமக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார் சிற்பக் கலைஞர் சரண் ராஜ். “மக்களை அரசியல்படுத்த, அரசியலில் ஒரு புரிதலை ஏற்படுத்தும் கலையை ஒரு கலை ஞன் தெரிந்திருக்க வேண்டும்” என்றும் சரண் ராஜ் குறிப்பிட்டார்.