மக்களுக்கான சமரசமற்ற போராட்டம் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்துவம்!
சீத்தாராம் யெச்சூரி நகர்- (மதுரை), ஏப். 2 - “தேர்தல் கூட்டணி கணக்குகளை தாண்டி, மக்களுக்காக சமரசமற்ற போராட்டங்களை நடத்துவது தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தனித்துவம்!” என புகழாரம் சூட்டி னார், மூத்த இதழியலாளர் என்.ராம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மது ரையில் புதன்கிழமையன்று எழுச்சி யுடன் துவங்கியது. ‘முன்னதாக செவ்வயான்று மாலை மாநாட்டு அரங்கில், “ மக்கள் ஜனநாயகப் பாதை’ வரலாற்றுக் கண்காட்சியை மூத்த இதழியலாளர் என். ராம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- மதுரையில் நடைபெறும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்துத்துவா - கார்ப்பரேட் கூட்டணி நவ-பாசிச பண்புகளைக் கொண்டது என வரைவு அரசியல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது. இதுகுறித்து மாநாட்டில் கருத்தாழமிக்க விவாதம் நடைபெறும். மாநாட்டில் முக்கியக் கருப்பொருளாகவும் இருக்கும். இடதுசாரிக் கட்சிகள் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கலாம். ஆனால், கம்யூனிஸ்டுகள் தான் கூட் டாட்சித் தத்துவம், தொழிற்சங்க உரி மைகள், தொழிலாளர் நல உரிமை கள், மக்களுக்கான நலத் திட்டங்களை வழங்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்புகின்றனர்; பேசுகின்றனர். தொடர்ந்து போராட்டத்திற்கான வடிவத்தையும் உருவாக்குகின்றனர். போராடுகின்றனர். பிற கட்சிகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் உள்ள வித்தி யாசம். இது தான். மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை கள், தேர்தல் உடன்பாடு விஷயங்க ளில் பிற கட்சிகளுடன் உடன்பாடு செய்துகொண்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் சொந்தக் கட்சித் திட்டத்தை செயல்படுத்துவ தில், ஆட்சியாளர்களிடம் வலியுறுத்து வதில் உறுதியாக உள்ளது. சொந்தக் கட்சியின் நிலைபாடு முக்கியம். அது தான் தனித்துவமானது. மதுரையில் நடைபெறும் 24-ஆவது மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொல்கத்தாவில் நான்கு அகில இந்திய மாநாடுகள் நடை பெற்றுள்ளன. மதுரையில் 1953, 1972- ஆம் ஆண்டுகளில் அகில இந்திய மாநாடு நடைபெற்றுள்ளது. தற்போது மூன்றாவது முறையாக மதுரையில் அகில இந்திய மாநாடு நடைபெறுகி றது. இந்த மாநாட்டின் தீர்மானங்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படு கின்றன.” இவ்வாறு என். ராம் பேசினார்.
உலகெங்கும் ஏகாதிபத்திய சக்திகளைஅலற வைக்கும் செங்கொடி!
ஏகாதிபத்திய சக்திகளை அலற வைக்கும் வகையில், செங்கொடி உல கெங்கும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது” என தீக்கதிர் முன்னாள் ஆசிரியரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலை வருமான வே. பரமேசுவரன் பெரு மிதம் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 24-ஆவது அகில இந்திய மாநாடு, மதுரையில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக செவ்வாயன்று மாலை, தோழர் பி. ராமமூர்த்தி நினைவு வளாகத்தில் புத்தகக் கண் காட்சியை தொடங்கி வைத்து வே. பர மேசுவரன் பேசியதாவது: இந்த மதுரையில் இதே தமுக்கம் கலையரங்கில், இதற்கும் முன்பும் அகில இந்திய மாநாடு நடைபெற் றுள்ளது. பெரிய வசதிகளற்ற அந்தக் காலத்தில் ஜோதிபாசு போன்ற தலை வர்கள் எல்லாம் அப்போது மாநாட்டு மேடையிலேயே படுத்துறங்கினர். தற்போது புத்தகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் தான் அன்று, கீற்றுக் கொட்டகை அமைக் கப்பட்டு, அதில் மாநாட்டுப் பிரதிநிதி கள் தங்கியிருந்தனர். 1972-இல் நடை பெற்ற அந்த மாநாட்டில் நான் தொண் டனாக பணியாற்றியதை நினைத்துப் பெருமை கொள்கிறேன். “வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற பெருமைக்குரிய இந்த மதுரையில், இந்த மாநாட்டு அரங்கிற்கு அருகில் உள்ள அமெ ரிக்கன் கல்லூரியில் தான், நம்மோடு 100 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த தோழர் என். சங்கரய்யா படித்தார். மாணவர் தலைவராக விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். மதுரை யில் உள்ள சேதுபதி பள்ளியில் தான் விடுதலைக்காக குரல் கொடுத்த மகாகவி பாரதி ஆசிரியர் பணியாற்றி னார். சுதந்திரப் போராட்டத்தில் தமிழ கம் முன்னணியில் நின்றது என்றால், தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டக் களமாக மதுரை விளங்கியது. மகாத்மா காந்தி காலத்திற்கு முன்பு துவங்கி, இன்றைக்கும் கூட ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டங்களை கம்யூ னிஸ்டுகள் நடத்திக் கொண்டிருக்கி றார்கள். சோவியத் வீழ்ச்சிக்குப் பின் கம்யூனிசம் வீழ்ந்தது என சிலர் கெக்கலி கொட்டினார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏகாதிபத்திய சக்திகளை அலற வைக்கும் பேரியக்கம் என்பதை உணர்த்தும் வகையில் செங்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருக்கிறது.” இவ்வாறு வே. பரமேசுவரன் பேசினார்.