tamilnadu

img

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து  அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 

 அரசு ஊழியர் சங்க தலைவர் மாநில நிர்வாகிகளை மிகுந்த கோபாவேசத்துடன் கடுமையாக பேசி, நிர்வாகிகள் கொடுத்த கோரிக்கை மனுவை அவர்கள் எதிரிலேயே கசக்கி வீசியதுடன், நிர்வாகிகளை தரக்குறைவாக பேசி, அநாகரிகமாக நடந்து கொண்டதைக் கண்டித்து கும்பகோணம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக ஒரு மணி நேர பணி புறக்கணிப்பு கண்டன போராட்டம் நடைபெற்றது.  போராட்டம், கும்பகோணம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன் தலைமையில் நடைபெற்றது. கண்டன போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட இணைச்செயலாளர் வெங்கடேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கும்பகோணம் வட்டத் தலைவர் மதியழகன், வட்டச் செயலாளர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.  நிறைவாக, கிராம ஊராட்சி செயலாளர், சங்க மாவட்டப் பொறுப்பாளர் ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.