articles

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எரிவாயுக்குழாய் வெடிப்பு மலேசியாவில் 112 பேர் பலி

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியில்  உள்ள தேசிய எண்ணெய் நிறுவனத்தின் எரிவாயு எடுத்து செல்லும் குழாய் ஒன்று செவ்வாயன்று வெடித்தது. இதனால் சுமார் 500 மீ நீளமுள்ள குழாயில் ஏற்பட்ட தீ 200 அடி உயரத்துக்கு பயங்கரமாக எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெப்பக்காற்று வீசியதுடன், கரும்புகை சூழ்ந்தது. இந்த தீ விபத்தில் 49க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 112 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர் என தெரியவந்துள்ளது.  

மூன்றாம் முறை ஜனாதிபதியாவேன் டிரம்ப் திடீர் அறிவிப்பு

டிரம்ப் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தான் கேலிக்காக கூறவில்லை எனவும் வலியுறுத்தியுள்ளார். பல மாகாணங்களில் 70 சதவீதத்திற்கும்  மேல் வாக்குகள் பெற்றதை குறிப்பிட்டு பெரும்பாலான மக்கள் தன்னை மீண்டும் ஜனாதிபதியாக காண விருப்புகிறார்கள்.  அமெரிக்க அரசமைப்பின்படி ஒருவர் இரு முறைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும் அதற்கு சில வழிகள் உள்ளது எனவும் கூறியுள்ளார்.  

மருத்துவர்களை படுகொலை செய்த இஸ்ரேல் ராணுவம்

 இஸ்ரேல் ராணுவம் சுமார் 15 மருத்துவர்கள் மற்றும் அவசரகால உதவியாளர்களை காசாவில் படுகொலை செய்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் தாக்குதலில் காசாவில் உள்ள சுகாதர நிலையங்களை இஸ்ரேல் அழித்துவிட்டது.   இதனால் காசாவில் சுகாதார நெருக்கடி நிலவி வருகின்றது. போர் துவங்கியதில் இருந்தே  இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மீறி சுகாதாரப் பணியாளர்களை படுகொலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  

மியான்மர் பலி எண்ணிக்கை  3,600 ஐ  கடந்தது  

மியான்மர் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,643 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் வெள்ளியன்று மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவாக மாறியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு 5 நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை உயிருடன் மீட்பதற்கான சாத்தியக்கூறு மிக  குறைவு எனவும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

கனடா -மெக்சிகோ  தலைவர்கள் பேச்சு

 கனடா பிரதமர் மார்க் கார்னி  மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமுடன் பேசியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவு குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த இரு நாடுகளின் மீதும் அமெரிக்கா அதிக வரி விதித்து வரும் நிலையில் அதற்கு எதிராக இணைந்து செயல்படுவது குறித்தும் இருநாடுகளின் வைக்கத்தை பாதுகாப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகின்றது.