tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடமாற்றம் செய்ய மக்கள் எதிர்ப்பு

நாமக்கல், ஏப்.2- சிங்கிலிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தை இட மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சி யரிடம் செவ்வாயன்று பொதுமக்கள் மனு அளித்தனர். அம்மனுவில், நாமக்கல் மாவட்டம், சிங்கிலிப்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகி றோம். கடந்த 30 ஆண்டுகளாக மாரியம்மன் கோவில் அரு கில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அத னருகிலேயே, அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை செயல் பட்டு வருகின்றன. தற்போது 2 கி.மீ. தொலைவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அலைச்சல் ஏற்படுவதுடன், மிகுந்த சிரமத்துக்குள்ளாவர். எனவே, தற்போதைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள காலியிடத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டிடத்தை கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக வாட்ஸ் அப் குழு துவக்கம்

தருமபுரி, ஏப்.2- ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்களின் பாதுகாப் புக்காக காவல் துறை சார்பில் வாட்ஸ் அப் குழு துவங்கப் பட்டுள்ளது. தருமபுரியில் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பாது காப்புக்காக வாட்ஸ்ஆப் குழு தொடங்கும் நிகழ்ச்சி செவ்வா யன்று தருமபுரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. சேலம் வட்ட காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் தலைமை வகித்தார். தருமபுரி பாதுகாப்புப் படை ஆய்வாளர் சந்தோஷ் கவுக்கர் முன்னிலை வகித்தார். ரயிலில் பெண் பயணிகள் பாது காப்பாக பயணம் மேற்கொள்வது குறித்தும், சமூக விரோதி களிடம் இருந்து ஏற்படும் பிரச்னைகளில் இருந்து தற்காத்துக் கொள்வது குறித்தும், விலை உயா்ந்த உடைமைகளை பாது காத்துக் கொள்வது குறித்தும், பிரச்சனை ஏதும் நிகழ்ந்தால் 1512, 139, 1091, 1098 எனற கட்டணமில்லா எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண் பயணிகள் பாதுகாப்பிற்காக 9498101964 என்ற தொலைபேசி எண் கொண்ட வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டது. இந்த குழுவின் மூலம் பெண்கள் தங்க ளின் பிரச்னைகளை தெரியப்படுத்தலாம். புகார்கள் குறித்து துறை அதிகாரிகள் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும், என அறிவுறுத்தப்பட்டது.

அவசரகதியில் கான்கிரீட் சாலை  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முற்றுகை

திருப்பூர், ஏப்.2– திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட முருகம்பாளையம் பகு தியில் அவசரகதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதனன்று மாநகராட்சி 4  ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி, 41 ஆவது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர், முருகம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளிட்ட வீதிகளில் பழுதடைந்த மழைநீர் வடி காலை அகற்றி புதிய மழைநீர் வடிகால் மற்றும் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் கடந்த மாதம் 13 ஆம் தேதி பணி துவக்க விழா நடைபெற்றது. இந்நிலை யில், 25 நாட்கள் கடந்த நிலையில், இப்பகுதியில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காக அவசரகதியில் குழிகள் தோண்டப் பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், சாலையின் நடுவே இருக்கும் மின் கம்பத்தை மாற்றி அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், சாக் கடை வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சாக்கடை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், உடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம் பத்தை மாற்றி அமைத்த பிறகே கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், முருகம்பாளையத்தில் உள்ள திருப்பூர் மாநகராட்சி 4 ஆவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை சமாதானப் படுத்தினர்.