world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பிரிவினைவாதிகள் சுட்டுக்கொலை: பாக். ராணுவம் நடவடிக்கை

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில்  வரலாறு காணாத வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அம் மாகாணத்தில் பலுசிஸ்தான் பிரி வினைவாதக் குழுவுக்கும் ராணு வத்துக்கும் இடையே சுமார் 40 மணி நேரம் நீடித்த மோதலில் சுமார் 145 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக் கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என அவ்வமைப்பினர் பல ஆண்டுகளாகவே பல்வேறு வகையிலான ஆயுதத் தாக்குதல்கள், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு  வருகிறார்கள்.  

ஷேக் ஹசீனாவுக்கு  20 ஆண்டு சிறைத் தண்டனை  

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2 ஊழல் வழக்குகளில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசுத் திட்டத்தின் கீழ் வீட்டு மனைகள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஊழல் வழக்குகளில் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நடத்த மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை ஒடுக்கியபோது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்பு குற்றங்களுக்காக வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘நிதி வலிமை பெற வளர்ச்சியில் முன்னணி நாடாக இருக்க வேண்டும்’

பெய்ஜிங், பிப்.2-  நிதி வலிமை பெற வேண்டுமானால் வளர்ச்சியில் முன்னணி நாடாக இருக்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.  சீனாவின் நிதித்துறையை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவது மற்றும் அந்நாட்டின் தனித்துவமான பொரு ளாதாரக் கொள்கைகளை வலுப்படுத்துவது குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி செயலாளரும் அந்நாட்டின் ஜனாதிபதி யுமான  ஜி ஜின்பிங் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.  சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை இதழான ‘கியுஷி’ (Qiushi Journal) வார இதழின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது பதிப்பில் வெளியாகியுள்ள அக்கட்டுரையில் சீனாவின் நிதி மேம்பாட்டுப் பாதை மற்றும் அதன் எதிர்கால இலக்குகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார்.  மேற்கத்திய நாடுகளை விட  மாறுபட்ட அணுகுமுறை சீனாவின் நிதி வளர்ச்சி என்பது நவீன நிதிக்  கொள்கை களைப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், சீனாவின் சொந்த தேசிய சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேற்குலக நாடுகளின் நிதி கொள்கையின் அடிப்படையில் இருந்து  முற்றிலும் மாறுபட்டது மற்றும் சீனாவின் தனித்துவ மான பண்புகளைக் கொண்டது என அக்கட்டுரையில் ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார். வலிமையான தேசத்திற்கான நிதி  நிதி ரீதியாக ஒரு நாடு வலிமையாக இருக்க வேண்டு மெனில், அதற்கு  உலகளவில் முன்னணி வகிக்கும் வகையிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஒட்டுமொத்த தேசியப் பொருளாதார வளர்ச்சி என்ற பொருளாதார வலிமை தேவை. மிகவும் வலிமையான தேசிய நாணயம் மற்றும் தன்னாட்சி மிக்க மத்திய வங்கி, உறுதி யான நிதி ஒழுங்குமுறை மற்றும் சர்வதேச தரத்திலான நிதி மையங்கள் ஆகியவற்றை உருவாக்குவதுடன் அவற்றின் முறையான செயல்பாடு மற்றும் பங்களிப்பின் மீதான கண்காணிப்பு, நிதியியல் துறையில் ஆழ்ந்த புலமை கொண்ட திறமையான அதிகாரிகள் (மனிதவளக் குழு), சீனாவின் நிதித் திறன்களை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல, ஒரு நவீன நிதி அமைப்பை விரைவாக உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  நேரடியாக அமெரிக்காவின் பொருளாதார வலிமைக்கும் ஆதிக்கத்துக்கும்  சவால் விடாமல் சீனாவின் வளர்ச்சி என்ற அடிப்படையில் அமெரிக்காவை விட மிக வலிமையான நாடாக  உருவாவது என்ற முறையில் சீன அரசு திட்டமிட்டு செயல்படுகிறது.  இக்கட்டுரையில் வலிமையான தேசிய நாணயம் உரு வாக்கப்பட வேண்டும் என்ற ஜி ஜின்பிங்கின் கருத்தை திரித்து அவர்,  நேரடியாக டாலருக்கு சவால் விட்டுள்ளார்; யுவானை உலகளவில் ஒரு வலுவான சக்தியாக மாற்றப்போவதாக கூறியுள்ளார் என மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.