தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்து வருவது, மாணவர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அரசு 2025 ஆம் ஆண்டில் இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை ரத்து செய்துள்ளது என்று அந்நாட்டு மாநிலத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை குறிவைத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில், அமெரிக்க அரசு புதிய விதிமுறையாக, சமூக ஊடக கணக்குகளுக்கு அணுகலை வழங்காவிட்டால் மாணவர்களின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவித்தது.
அதன் பின்னர், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள், போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் ஆகியோருக்கு, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, விசா ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், இந்த நடவடிக்கைகள் தங்களது கல்வி மற்றும் எதிர்கால திட்டங்களில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்