world

img

கென்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புக்கர் ஓமோல் காவல்துறையினரால் கடத்தல்

கென்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் புக்கர் ஓமோல் காவல்துறையினரால் கடத்தல்

நைரோபி,மார்ச் 4- கென்ய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) பொதுச்செயலாளரும், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவருமான புக்கர் எங்கேசா ஓமோல், பிப்ரவரி 23 அன்று இரவு கென்ய காவல் துறையினரால் கடத்தப்பட்டு கொடூரமாகத் தாக்கப் பட்டுள்ளார் என அக்கட்சி அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, ஓமோல் இசியோலோ (Isiolo) என்ற  பகுதியில் வைத்து காவல் துறையின ரால் வலுக்கட்டாயமாகக் கடத்தப் பட்டுள்ளார்.  வாகனத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அவர் தொடர்ச்சி யாக அலைக்கழிக்கப்பட்டுள்ளார்.  தற்போது அவர் மலோலோங்கோ (Mlolongo) என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்ன குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப் பட்டுள்ளார் என இதுவரை காவல்துறை தெளிவாக தெரிவிக்கவில்லை.  புக்கர் ஓமோல் குறிவைத்து தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவரது வீட்டில் வைத்து அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப் பட்டது. அரசாங்கத்தில் ஊழல், தொழி லாளர் விரோதப் போக்கை வெளிப்படை யாக விமர்சிப்பதாலும், சர்வதேச அளவில் அவருக்கு இருக்கும் செல்வாக்காலும் அவர் தொடர்ந்து இத்தகைய அச் சறுத்தல்களைச் சந்தித்து வருகிறார். தற்போது காவல் நிலையத்தில் உள்ள ஓமோலைச் சந்திக்க அவரது வழக்க றிஞர்களுக்கும், தோழர்களுக்கும் அனு மதி மறுக்கப்பட்டுள்ளது.  அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வும் காவல் துறை மறுத்து வருகின்றது. கட்சியின் வழக்கறிஞர்கள் அவரை விடுவிக்கப் போராடி வரும் நிலையில், கட்சித் தோழர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “இது கைது அல்ல, கடத்தல்” இந்தச் சம்பவம் ஒரு சட்டப்பூர்வமான கைது நடவடிக்கை அல்ல. சட்டவிரோதத் தடுத்துவைப்பும் அல்ல. இது ஒரு கடத்தல் நடவடிக்கை என்று சிபிஎம்-கே (CPM-K)  குற்றம்சாட்டியுள்ளது. மேலும் தோழர் ஓமோலை உடனடி யாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும். இந்தக் கடத்தலில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓமோல் மீது கடுமையாகத் தாக்கு தல் நடந்ததால் அவருக்குப் பல் உடைந்தி ருப்பதாகவும், கூர்மையான ஆயுதத்தால் விரல் வெட்டப்பட்டிருப்பதாகவும் கட்சி அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.  மேலும், அவருக்கு உணவோ, தண்ணீ ரோ வழங்கப்படாமல் மிக மோசமான  நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் நடவடிக்கையும்  தாக்குதலும் ஓமோலை மட்டும் குறி வைத்தது அல்ல, மாறாக கென்யாவில் உள்ள உழைக்கும் வர்க்கம், முற்போக்கு இயக்கங்களை அச்சுறுத்துவதற்காக அரசு நடத்தியுள்ள வன்முறை என கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. “எந்த சிறையாலும் மக்களின் விருப் பத்தை அடக்க முடியாது. எந்த லத்தியா லும் உண்மையை அடித்து வீழ்த்த முடி யாது” என்று அக்கட்சி தனது அறிக்கை யில் குறிப்பிட்டுள்ளது.