செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் பணிநீக்கம்
எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் திறன் துறை, தானியங்கி முறையில் வேலை குறைப்பு செய்யும் அமெரிக்க மென்பொருளை செயற்கை நுண்ணறிவின் மூலம் மாற்றியமைத்து வருகிறது. இம்மென் பொருள் அமெரிக்க பாதுகாப்புத் துறையால் 20 ஆண்டுகளுக்கு முன்பே பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்களை வரிசைப்படுத்த உருவாக்கப்பட்டது. தற்போது இந்த மென்பொரு ளின் செயலை மாற்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு வருகின்றது.
கூடுதல் வரி விதித்தால் பதிலடி - சீனா எச்சரிக்கை
சீன பொருட்களுக்கு மேலும் 10 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை “பனிப்போர் மனநிலையின்” அடையாளம் என்று விமர்சித்ததுடன், கூடுதல் வரி விதித்தால் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மார்ச் 4 முதல் சீனா, கனடா மற்றும் மெக்சிகோ மீது விதிக்கப்படும் 25 சதவீத வரிகள் மட்டுமில்லாமல் சீனாவிற்கு மட்டும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிற்கான சிறையாக மாறும் பனாமா - கோஸ்டாரிகா
அமெரிக்காவில் இருந்து வெளி யேற்றப்படும் வெளிநாட்டி னர் 2,500க்கும் மேற்பட்டோர் பனாமா - கோஸ்டாரிகாவில் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அடைக்கப் பட்டவர்களின் பாஸ்போர்ட், செல்போன்களை அந்நாட்டு அதிகாரிகள் பறித்துக்கொள்வதாகவும் சட்ட உதவிகளை அணுக முடியாமல் தடுப்பதாக வும் புகார்கள் எழுந்துள்ளன. அதிகாரிகளின் இத்த கைய மோசமான கெடுபிடிகளை மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினர் கண்டித்துள்ளனர்.
மக்களுக்கு வீடில்லாத நிலை: இங்கிலாந்தின் அவமானம்
வீடற்ற மக்கள் தெருவில் உறங்கும் நிலை இங்கிலாந்தின் அவமானச் சின்னமாக மாறியுள்ளது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசாங்கத் தரவுகளின் படி ஒவ்வொரு நாளும் சுமார் 4,667 நபர்கள் தெருவில் உறங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும் வீடின்றி தற்காலிக தங்குமிடங்களில் இருப்பவர்களின் எண்ணி க்கையும் அதிகரித்துள்ளது. இதனை சரி செய்ய அரசு 300 கோடிகள் ஒதுக்கியுள்ளது. எனினும் பிரச்சனையின் வேரை சரி செய்யாமல் வீடற்ற வர்கள் பிரச்சனையை சரி செய்ய இயலாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
படைகளை வெளியேற்றமாட்டோம்: நிரந்தரமாக நிறுத்த இஸ்ரேல் திட்டம்
தெற்கு லெபனான் மற்றும் சிரியாவில் தங்கள் ராணுவத்தை நிரந்தரமாக நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆக்கிர மிப்பை செய்வதற்கு அமெரிக்காவும் எங்களுக்கு ஒப்புதல் கொடுத்து விட்டது. நாங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்போகும் எல்லைகள் குறித்தான வரைபடத்தை அமெரிக்காவிடம் கொடுத்து விட்டோம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆக்கிரமிப்பு கட்டாயமாக நடக்கும் என்றும் அழுத்தமாக கூறியுள்ளார்.
ரஷ்ய - அமெரிக்க அதிகாரிகள் : இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை
ரஷ்யா மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் இரு நாடுகள் மட்டும் பங்கேற்று நடத்திய உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இந்த இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. பல ஆண்டுகளாக தூதரக உறவுகளை துண்டித்துக் கொண்ட இருநாடுகளும் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் மீண்டும் இரண்டு நாடுகளில் தூதரகத்தை அமைப்பது பற்றியும் பொருளாதார உறவுகளில் இணைந்து செயல் படுவது குறித்தும் கடந்த முறை பேச்சுவார்த்தை யில் முடிவெடுத்திருந்தனர். இந்நிலையில் தங்களுடைய தூதரகங்களின் செயல்பாட்டை இயல்புநிலைக்கு கொண்டுவருவது குறித்து தற்போதைய சந்திப்பில் விவாதித்தனர். ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் முந்தைய நிர்வாகத்தின் சட்டவிரோதமான செயல்பாடுகளின் விளைவாக ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இக்கூட்டத்தின் முடிவுகளின் அடிப்படையில் தான் நாம் எவ்வளவு வேகமாகவும் திறம்படவும் முன்னேற முடியும் என்பது தெளிவாகும் என குறிப்பிட்டுள்ளார். புடின் பேச்சு இந்த சந்திப்பு நடந்த அதே தினத்தில் ரஷ்ய பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய புடின், டிரம்ப் நிர்வாகத்தின் நடைமுறை செயல்பாட்டையும், யதார்த்தமான பார்வையில் இருந்து எடுக்கும் முடிவுகளையும் பாராட்டுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடனான முதல் பேச்சுவார்த்தையே நம்பிக்கைகளை ஊக்குவிக்கின்றன என்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மீட்டெடுப்பதற்கும், உலகளவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனைகளை படிப்படியாக தீர்ப்பதற்கும் ஒரு பரஸ்பர உறவு துவங்குவதற்கு தயார்நிலையில் உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் மேற்கத்திய நாடுகளின் உயரடுக்கில் உள்ள ஒரு பகுதியினர் நமது இருநாடுகளு க்கும் இடையிலான முரண்கள், உறுதியற்ற தன்மை மேலும் நீடிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளனர். அது மட்டுமின்றி தற்போது துவங்கி யுள்ள இந்த பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவும் முயற்சிக்கலாம். இந்நிலையில் ரஷ்ய அதிகாரி கள் அத்தகைய முயற்சிகளை தடுக்கத் தயா ராக இருக்க வேண்டும் என புடின் அறிவுறுத்தியுள்ளார்.