ஜெலன்ஸ்கி போர் நிறுத்தத்தை விரும்பவில்லை ; ஐரோப்பிய நாடுகள் தனியாக ஆலோசனை
உக்ரைனின் கனிம வளங்களில் 50 சத வீதத்தை அமெரிக்காவிற்கு வழங்க ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி, இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கா சென்றிருந்தார். இந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் நடந்தது.
ஜெலன்ஸ்கியின் நிபந்தனை
அமெரிக்கா ராணுவ ரீதியிலான பாது காப்பு உறுதி கொடுத்தால் கையெழுத்திடு வதாக ஜெலன்ஸ்கி நிபந்தனை விதித்தார். ஆனால் உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை டிரம்ப் ஏற்கவில்லை. ரஷ்யா போரை நிறுத்த விரும்புகிறது, ஆனால் ஜெலன்ஸ்கி போர் நிறுத்தத்தை விரும்ப வில்லை என டிரம்ப் குற்றம் சாட்டினார்.
டிரம்பின் மிரட்டல்
டிரம்ப், “நீங்கள் இதில் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், இல்லையென்றால் நாங்கள் போரில் இருந்து வெளியேறிவிடுகிறோம்” என்று ஜெலன்ஸ்கியை மிரட்டினார். மேலும், “நீங்கள் பெரிய சிக்கலில் இருக்கிறீர்கள், இந்த போரில் வெற்றி பெறவில்லை” என்றும் கூறினார். ஜெலன்ஸ்கியும், “நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் இருக்கிறோம். இவ்வளவு காலமாக நாங்கள் பலமாகதான் இருந்தோம். உங்களுக்கும் உங்கள் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்” என்று கடுமையான பதிலளித்தார்.
அமெரிக்காவிற்கு அவமரியாதை
டிரம்ப், “இப்படியே சென்றால் நிலைமை மோசமாகும். நீங்கள் கோடிக்கணக்கான மக்களின் உயிருடன் விளையாடுகிறீர்கள். நீங்கள் மூன்றாம் உலகப் போருடன் விளையாடுகிறீர்கள். இது அமெரிக்காவிற்கு மிகவும் அவமரியாதையான செயல்” என்று விமர்சித்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், “போரை முடிவுக்குக் கொண்டுவர ராஜதந்திரம் தேவை” என்றார். ஜெலன்ஸ்கி, “என்ன தந்திரம்?” என்று கேள்வி எழுப்ப, டிரம்ப், “அமெரிக்க ஜனாதிபதி மாளிகையை அவமரியாதை செய்யாதீர்கள்” என்று பேச்சை மாற்றினார்.
அமெரிக்காவின் ஆதரவு
டிரம்ப், “அமெரிக்கா உங்களுக்கு 350 பில்லியன் டாலர்கள் வரை கொடுத்துள்ளது. உங்களுக்கு ராணுவ உபகரணங்களையும் நிறைய ஆதரவையும் கொடுத்துள்ளோம். உங்களிடம் எங்கள் ஆயுதங்கள் இல்லை யென்றால், இந்த போர் இரண்டு வாரங்களில் முடிந்திருக்கும்” என்றார். ஜெலன்ஸ்கி, “இதையே தான் புடினும் கூறினார்” என்று டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புடினின் குரலில் பேசு வதாக சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள் முன்பாகவே விவாதம்
இந்த விவாதம் ஊடகங்கள் முன்பாகவே நடந்தது. “இங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது அமெரிக்க மக்களுக்கு நல்லது” என்று டிரம்ப் கூறினார். “நாங்கள் செய்த அனைத்து உதவிக்கும், உக்ரைன் நன்றி யுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும். தனியாகப் போரை நடத்தி செல்வதற்கு உக்ரைனிடம் எந்த திட்டமும் இல்லை. மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், உங்களிடம் ராணுவ வீரர்கள் குறைவாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் போர் நிறுத்தம் வேண்டாம் என்று கூறுகிறீர்கள். இனி உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க நீங்கள் இப்போதே போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்” என்று டிரம்ப் பேசினார். போர் நிறுத்தத்திற்கு தயாராக இருந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்ப தாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தெரி வித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு
ஆனால் இதே நேரத்தில் போரை நடத்து வதில் ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக உள்ளன. உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானு வேல் மக்ரோன் வெளிப்படையாகவே கூறி னார். மேலும் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றி யத்தில் உள்ள தலைவர்களும் கனடா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் டிரம்பின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இயற்கை வளங்களை பங்கு போடும் ஐரோப்பிய நாடுகள் திட்டம்
அமெரிக்கா உக்ரைன் ராணுவத்திற்கு செய்த செலவுகளுக்கு பதிலாக அந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க விரும்பும் அதே நேரத்தில் ஐரோப்பிய நாடு களும் இங்கிலாந்தும் உக்ரைனுக்கு கொடுத்த 70 பில்லியன் டாலர் கடனுக்கு கைமாறாக கனிம வளங்களை கைப்பற்ற திட்டமிடு கின்றனர்.
நேட்டோ நாடுகளின் ஆலோசனை
இது தொடர்பாக மக்ரோனும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனாக்கும் டிரம்பை ஏற்கனவே சந்தித்துள்ளனர். தற்போது இந்த போர் குறித்து ஆலோசிப்பதற்காக மார்ச் 2 அன்று சுனாக் தலைமையில் நேட்டோ நாடுகளின் தலை வர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.