தஞ்சாவூர், மார்ச் 1- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் வ.மதியழகன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் மா.க. ராமமூர்த்தி, சுப.சிவசாமி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் எஸ்.சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் எம். செல்வி வரவேற்றார். ஆசிரியர் சி.வ. ஆனந்த் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராமத்தினர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் நாகேஸ்வரி நன்றி கூறினார்.