விவசாய தொழிலாளர் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி, மார்ச் 2- பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சலோமி, மாவட்ட பொருளாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் பி.ராமசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி ஆகியோர் விளக்கவுரையாற்றினர். விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பாண்டியன், தலைவர் எம்.ராமசாமி,பொருளாளர் செளந்தர்ராஜன், சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் குமார், பாஸ்கர், வாலிபர் சங்க நிர்வாகிகள் ராஜ்குமார், சாத்தப்பன் ஆகியோர் பங்கேற்றனர். பொன்னமராவதி பேரூராட்சியில் விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொன்னமராவதி ஒன்றியத்தில் 100 நாள் வேலை சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியான ரூ.319 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.