சிபிஎம் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கான இணையதளம் மற்றும் இசை இன்று வெளியிடப்பட்டது.
சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாடு, மதுரையில் ஏப் - 2 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறகிறது. இந்த நிலையில் மாநாட்டிற்கான இணையதளம், இசை - ஒளிப்படம் வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் குறும்பட போட்டி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று மதுரையில் உள்ள ஹோட்டல் சபரீஸ் பார்க்கில் மாநிலக்குழு உறுப்பினர் பத்ரி தலைமையில் நடைபெற்றது.
மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் சிபிஎம் 24 ஆவது அகில இந்திய மாநாட்டின் இணையதளத்தை துவக்கி வைத்தார், மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் ‘தமிழ் கம்யூனிஸ்ட்’ என்ற ஆடியோவை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், க.சுவாமிநாதன், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் மா. கணேசன், கே. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா, துணை மேயர் தி.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.