india

img

சிபிஎம் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டு, மதுரையில் ஏப்ரல் 2-ஆம் முதம் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சியின் பொதுச்செயலாளராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஏ.பேபி (71) தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களாக பினராயி விஜயன், பி.வி.ராகவுலு, எம்.ஏ.பேபி, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்.டி.சலீம், விஜயராகவன், அசோக் தவாலே, ராமச்சந்திர டோம், எம்.வி.கோவிந்தன், அம்ரா ராம், விஜூ கிருஷ்ணன், மரியம் தவாலே, உ.வாசுகி, கே.பாலகிருஷ்ணன், ஜிதேந்திர சவுத்ரி, ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, அருண் குமார் ஆகிய 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இம்மாநாட்டில், 30 புதிய முகங்கள் உட்பட 84 பேர் மத்தியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், ஆர்.கருமலையன், என்.குணசேகரன், கே.பாலபாரதி ஆகியோர் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்தியக்குழு உறுப்பினர்களாக பினராயி விஜயன், பி.வி.ராகவுலு, எம்.ஏ பேபி, தபன் சென், நிலோத்பால் பாசு, எம்.டி.சலீம். A.விஜயராகவன், அசோக் தவாலே, ராமச்சந்திரா டோம், எம்.வி.கோவிந்தன், வி.ஸ்ரீனிவாச ராவ், சுப்ரகாஷ் தாலுக்தார், இஷ்பாகுர் ரஹ்மான், லல்லன் சௌத்ரி, அவதேஷ் குமார், பிரகாஷ் விப்லவ், முகமது யூசுப் தாரிகாமி, பி.கே.ஸ்ரீமதி, இ.பி.ஜெயராஜன், தாமஸ் ஐசக், கே.கே.சைலஜா, எளமரம் கரீம், கே.ராதாகிருஷ்ணன், கே.என்.பாலகோபால், பி.ராஜீவ், பி.சதீதேவி, சி.எஸ்.சுஜாதா, ஜஸ்விந்தர் சிங், சுக்விந்தர் சிங் ஷெகோன், அம்ரா ராம், கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத், பி.சண்முகம், டி.வீரபத்ரம், ஜிதேந்திர சவுத்ரி, ஹிராலால் யாதவ், ஸ்ரீதீப் பட்டாச்சார்யா, சுஜன் சக்ரவர்த்தி, அபாஸ் ரே சௌத்ரி, ஷமிக் லஹிரி, சுமித் தே, டெப்லினா ஹெம்ப்ராம், கே.ஹேமலதா, ராஜேந்திர சர்மா, எஸ் புண்யாவதி, முரளிதரன், அருண் குமார், விஜூ கிருஷ்ணன், மரியம் தவாலே, எ.ஆர்.சிந்து, ஆர் கருமலையான், கே.என்.உமேஷ், விக்ரம் சிங், புதிய முகங்கள் அனுராக் சக்சேனா, எச்.ஐ.பட், பிரேம் சந்த், சஞ்சய் சவுகான், கே.பிரகாஷ், டி.பி.ராமகிருஷ்ணன், புத்தளத் தினேசன், சலீகா, அஜித் நவாலே, வினோத் நிகோலே, சுரேஷ் பாணிக்ராஹி, கிஷன் பரீக், என்.குணசேகரன், ஜான் வெஸ்லி, எஸ்.வீரய்யா, தேபப்ரதா கோஷ், சையத் ஹுசைன், கொன்னோய்கா கோஷ், மீனாட்சி முகர்ஜி, சமன் பதக், மானெக் டே, நரேஷ் ஜமாதியா, ரத்தன் பௌமிக், கிருஷ்ணா ரக்ஷித், லோகநாதம், கே.பாலபாரதி, டி.ரமா தேவி, டி.ஜோதி, ராஜேந்திர சிங் நேகி, சாய்பாபு ஆகியோர் மத்தியக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு அழைப்பாளராக மாணிக் சர்க்கார், பிரகாஷ் காரத், பிருந்தா காரத், சுபாஷினி அலி, எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை, பிமன் பாசு, ஹன்னன் மொல்லா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர்களாக ஜி.ராமகிருஷ்ணன், எம்.விஜயகுமார், யு.பசவராஜு, ராபின் டெப், ஜோகேந்திர சர்மா, ரமா தாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.