tamilnadu

img

அறந்தாங்கி ஐடியல் பள்ளியில் ஆண்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஐடியல் பள்ளியில் 31 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ் சங்க தலைவர், செனட் உறுப்பினர் கவிஞர். தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார்.  தனியார் பள்ளிகள் சங்க மாவட்டத் தலைவர் டாக்டர் முருகப்பன் முன்னிலை வகித்தார். ஐடியல் கல்வி குழும தாளாளர் ஷேக் சுல்தான் வரவேற்றார். சின்னத்திரை கலைஞர் அனிதா சம்பத், சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். விழாவில், ஐடியல் பள்ளியில் பயின்று தற்போது பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பாராட்டி பரிசு வழங்கபட்டது. மேலும், பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு கலைத்திறன், தனித்திறன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள், கேடயங்கள் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஆசிரியர்கள், பெற்றோர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்.