states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

குஜராத் முன்னாள் முதலமைச்சர் சங்கர் சிங்

கோத்ரா வன்முறை சம்பவம் 23 ஆண்டுகளை கடந்துவிட்டது. கரசேவகர்கள் ரயிலிலும், அந்த குறிப்பிட்ட பெட்டியிலும் இருந்ததை ஆர்எஸ்எஸ் மட்டுமே அறிந்திருந்தது. ரயில் பெட்டியில் உள்ளே இருந்துதான் தீ வைக்கப்பட்டது. வெளியே அல்ல. குஜராத்தில் பாஜக மற்றும் மோடியின் தேர்தல் வெற்றிக்காக ஒரு வகுப்புவாத கலவரத்தை உருவாக்க கோத்ரா வன்முறை வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டது.

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி.கிருஷ்ணன்

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகளில் புகார்தாரரின் குற்றச்சாட்டுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், காவல்துறை விரிவான விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கண்டறியப்பட்டால், சட்டப்படி புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி

நான் “56 அங்குல மார்பு கொண்டவர்” என பிரதமர் மோடி அடிக்கடி தன்னைப் பற்றி பெருமை பேசுகிறார். ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவுக்கு காலாவதியான எப்-35 விமான விற்பனையை அறிவித்தபோது அமைதியாக இருந்தார். இது பரிதாபமானது.

தேசியவாத காங்கிரஸ் (அஜித்) மூத்த தலைவர் ஏக்நாத் காட்சே

மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகள் காவல்துறையைக் கண்டு பயப்படுவதில்லை. அதனால் தான் இன்று என் பேத்தி பாலியல் வன்முறையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.