ஐஎம்எஃப் கடன் சுமையின் சவால்களை எதிர்கொள்ளும் தெற்குலக
இலங்கையின் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட், தெற்குலக நாடுகள் சந்திக்கும் ஐஎம்எஃப் கடன் சுமை சவால்களை பிரதிபலிக்கிறது. பிப்ரவரி 17-ல் பட்ஜெட்டை ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான அனுர குமார திஸாநாயக்க சமர்ப்பித்தார். ஜனதா விமுக்தி பெரமுன தலைமையில் அமைந்துள்ள அரசின் கொள்கைகளுக்கு, முந்தைய அரசின் ஐஎம்எஃப் 17-வது கடன் ஒப்பந்தம் தடையாக உள்ளது. பட்ஜெட் உரைக்கு சில நாட்களுக்குப் பின்னர், திஸாநாயக்க பேசும்போது, ‘நமது பொருளாதாரம் நிபந்தனைகள் அடிப்படையில் செயல்படுகிறது. பொருளாதார சுதந்திரம் அல்லது இறையாண்மை இல்லை. நமது அரசின் தகுதி கண்காணிக்கப்படுகிறது’, என்றார். தேர்தல் நேரத்தில், இலங்கைக்கு பாதகமான பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (IMF) கடன் சுமை மறுசீரமைப்பு செய்யப்படும் என்று கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக தமது அரசு பின்வாங்க நேரிட்டதை, நேர்மையாக ஒப்புக் கொண்டார். அடிப்படை நிதி பற்றாக்குறையை குறைப்பது என்ற பாதையில் புதிய அரசின் பட்ஜெட் உள்ளது.
மொத்த அரசு வருவாய் 23% (பிரதானமாக மறைமுக வரிகள் மூலம்) அதிகரிக்கும். அரசு செலவினங்கள் 13% மட்டுமே உயரும். இருப்பினும், பட்ஜெட் பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7%, ஐ.எம்.எஃப் பரிந்துரைத்த 5.2% விட அதிகம். இது IMF-ன் குறிக்கோள்கள் அரசியல் சாத்தியமற்றது; மேலும் கொடூரமான சிக்கன திட்டங்களின் பிரதிபலிப்பு என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஐஎம்எப் நிபந்தனையை மீறி பட்ஜெட் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒரு அடிப்படை காரணம், பொது மூலதன முதலீடுகளை திரும்பக் கொண்டு வந்ததாகும். அரசு செலவினங்களில், பொது முதலீடுகள், 2024 இல் 13% ஆக இருந்தது, 2025-இல் 28% ஆக உயர்த்த திஸநாயக்க அரசு முடிவு செய்தது. தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளை நிறைவேற்ற, 5% வளர்ச்சி விகிதம் அடைய இது தேவையாகும்.
2025 மொத்த செலவினங்களில் 41% கடன்களுக்கான வட்டிக்கே செல்கிறது. 2022-ல் வெளிநாட்டு கடன்களை திரும்ப செலுத்த இலங்கை தவறியது. உலகில் மிக உயர்ந்த வட்டிச் சுமையில் இலங்கை சிக்கி உள்ளது. பிளாக்ராக் மற்றும் ஆஸ்மோர் போன்ற தனியாரிடமிருந்து கடன் பெற்றுள்ளதால், இலங்கை உயர் வட்டி கடன்களை சந்திக்கிறது. குறைந்த வருமானமுள்ள நாடுகளின் கடன்களை மறுசீரமைக்க, ஜி 20 அமைப்பு பொதுத்திட்டம் வகுத்துள்ளது. ஆனால் இலங்கை போன்ற நடுத்தர வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு கடன் திட்டம் மாற்றியமைக்க எத்திட்டமும் இல்லை. எனினும், இந்த சவால்களை உறுதியாக எதிர்கொள்வோம் என திஸாநாயக்க கூறியுள்ளார்.
குவாண்டநாமோவில் 50,000 பேர் ஆர்ப்பாட்டம்
மக்களும் உலகமும் தொடர் 186
பிப்ரவரி 26-ல், கியூபாவில் உள்ள குவாண்டநாமோவின் புரட்சிகர சதுக்கத்தில், 50,000 கியூபா மக்கள் திரண்டு அமெரிக்க வெளியுறவு கொள்கை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். குவாண்டானாமோவில் உள்ள அமெரிக்காவின் கப்பல் படை தளத்தை ஒட்டி 30,000 புலம்பெயர்ந்தோரை அமெரிக்க சிறையில் அடைத்து வைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவிற்கு எதிராக, இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்கா குவாண்டநாமோ கப்பற்படை தளத்தை, சிறையை காலி செய்து கியூபாவிடமே ஒப்படைக்க வேண்டும் என கியூபா, பல 10 ஆண்டுகளாக போராடி வருகிறது. அமெரிக்க ராணுவ தலைமையகத்தின் தலைவர் பிப்ரவரி 25-ல் குவாண்டானாமோ கப்பற்படை தளத்திற்கு விஜயம் செய்தார். 60 ஆண்டுகளுக்கு மேலாக கியூபா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க கோரியும், குவாண்டானாமோ கப்பற்படைத்தளம், சட்ட விரோதமாக அமெரிக்கா ஆக்கிரமித்து இருப்பதை கைவிட கோரியும், ராஜாங்கபூர்வமான தீர்வுகளுக்கு முயற்சிப்பதுடன், பெரும் திரள் ஆர்ப்பாட்டங்கள் மூலமும், அமெரிக்காவிற்கு நிர்ப்பந்தம் செலுத்தி வருகின்றனர்.