வகுப்புவாதத்தை நிலைநிறுத்துவேன் என சத்தியப் பிரமாணம் பாஜக மேயருக்கு எதிராக வலுக்கும் கண்டனம்
பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநி லத்தில் சமீபத்தில் நடை பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்லில் பிலாஸ்பூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றியது. பிலாஸ்பூர் மாநக ராட்சி மேயராக பூஜா விதானி தேர்ந்தெ டுக்கப்பட்டார். இந்நிலையில், வெள்ளியன்று முங் கேலி நாகா திடலில் பூஜா விதானி யின் மேயர் பதவியேற்பு விழா நடை பெற்றது. பதவியேற்பு விழாவில் சத்தி யப்பிரமாணத்தின் போது பூஜா விதானி,”இந்தியாவின் வகுப்பு வாதத்தையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன்” எனக் கூறினார். மேயரின் இந்த செயல்பாட்டால் நிகழ்ச்சி யில் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, பின் னர் மீண்டும் இரண்டாவது முறையாக சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது. அதில்,”இந்தியாவின் இறை யாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன்” எனக் கூறினார். இத்தகைய சூழலில் பாஜக மேயர் பூஜா விதானிக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் பலரும் கண்டன கருத்துக் களை பதிவிட்டு வருகின்றனர். டேராடூன் உத்தரகண்ட் பனிச்சரிவு
பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே உள்ள மனா கிராமம் இந்தியா - சீனா எல்லைக்கு அரு கில் கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த மனா கிரா மத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதி யில் எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே நடந்துக்கொண்டி ருக்கும் டபுள் லேன் இடத்தில் வெள் ளிக்கிழமை அன்று பனிச்சரிவு ஏற்பட் டது. இந்த பனிச்சரிவில் பிஆர்ஓ சாலைப்பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த 57 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் 48 பேர் காயத்துடன் மீட்கப்பட்ட னர். 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்த நிலையில், காணாமல் போன 5 பேரை தேடும் பணி ஞாயிறன்று தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில், காணாமல் போன வர்களில் மேலும் 4 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். இதன்மூலம் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஒருவரின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை.